நேபாளத்தின் பிரதமர் கே.பி. சர்மா ஒலியை இராஜினாமா செய்யக் கோரி போராட்டம்

Published By: Digital Desk 1

09 Sep, 2025 | 12:52 PM
image

நேபாளத்தில் இடம்பெற்றுவரும் போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது.

அரசாங்கத்தின் சர்வாதிகார அணுகுமுறையை எதிர்த்து போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பிரதமர் கே.பி. சர்மா ஒலி இராஜினாமா செய்யும் வரை தாங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் கூறி வருகின்றனர்.

ஜெனரல்-இசட் நடத்திய சமூக ஊடக ஆதரவு போராட்டம் தற்போது ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு பெரிய காரணமாக மாறியுள்ளது. 

பிரதமர் கே.பி. சர்மா ஒலி சமூக ஊடகங்கள் மீதான தடையை திரும்பப் பெற்றுள்ள நிலையில், பரவலான ஊழல் காரணமாக போராட்டக்காரர்கள் தற்போது அவரது இராஜினாமாவைக் கோருகின்றனர். 

குறிப்பாக, பல்வேறு அமைச்சர்களின் மகன்கள் மற்றும் மகள்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் நேபாளத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு அமைச்சர்களின் குடும்பங்கள் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் அதேவேளையில், சாதாரண நேபாள குடிமக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தக்கூட போராடுகிறார்கள் என இளைஞர்கள் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெல்ஜியத்தில் பயங்கர சோகம் ; பிரஸ்ஸல்ஸ்...

2026-07-15 09:40:24
news-image

ஈரானில் எல்லாம் அழிந்துவிட்டது ; மொஜ்தபா...

2026-07-14 13:04:47
news-image

சவூதி அரேபியா மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்...

2026-07-14 12:58:29
news-image

ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 கப்பல்கள்...

2026-07-14 12:28:49
news-image

நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிர்தப்பிய நபர்!

2026-07-14 12:27:48
news-image

மத்திய கிழக்கு பதற்றம்: உலக சந்தையில்...

2026-07-14 07:20:14
news-image

தண்ணீர் என நினைத்து கழிவறை சுத்திகரிப்பு...

2026-07-13 16:16:01
news-image

ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் நடிகர்...

2026-07-13 14:15:05
news-image

அமெரிக்கா - ஈரான் போர் நடவடிக்கைகளினால்...

2026-07-13 11:56:10
news-image

பங்களாதேஷில் கடும் மழை : வெள்ளப்...

2026-07-13 10:51:37
news-image

வெனிசுவேலாவை உலுக்கிய இரட்டை பூமியதிர்ச்சி: பலி...

2026-07-13 10:59:16
news-image

ஐரோப்பாவில் வெப்ப அலையினால் ஜூன் மாத...

2026-07-13 09:44:43