இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
அதற்கமைய, காலை 10 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு நடவடிக்கைகள் மாலை 05 மணி வரை இடம்பெறும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தேர்தலில், ஆளும் என்.டி.ஏ. கூட்டணி சார்பில், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
அதேபோன்று இந்தியா கூட்டணி சார்பில், உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.
இந்திய குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்த ஜெகதீப் தன்கர், கடந்த ஜூலை மாதம் 21 ஆம் திகதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாள் இரவு தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து, குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு இந்திய தேர்தல் ஆணையகம் தேர்தலை அறிவித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM