இலங்கையிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் வெளிநாட்டவர்கள் சிறுநீரகமாற்று சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள  சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது.

சட்டவிரோத சிறுநீரக பரிமாற்றம் தொடர்பில் இலங்கை வைத்தியர்கள் அறுவருக்கு இந்தியாவில் வழக்கு

சட்டவிரோத சிறுநீரக செயற்பாடுகள் தொடர்பாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கடமை புரியும் 6 வைத்தியர்களுக்கு இந்திய பொலிஸார் வழக்கு தாக்குதல் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வைத்திய கோட்பாடுகளை மீறி சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைகளை மேற்கொண்ட குற்றச்சாட்டிலே வழக்குத் தாக்குதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைகளுக்கு சுரேஷ் பிரஜாபதி (36) என்பவர் அவரின் இரு உதவியாளர்களான திலிப் உமேதா, சௌஹான் என்பவர்களை பயன்படுத்தியுள்ளார்.

பிரஜாபதியின் இரு உதவியாளர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுகாதார பரிசோதனையை நடத்துவதற்கு அகமதாபாத்திலுள்ள பல்வேறு சிகிச்சை நிலையங்களில் சிறுநீரக கொடையாளிகளுக்கு சௌஹான் உதவியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைகளுக்காக 28 இலட்சம் தொடக்கம் 30 இலட்சம் வரை பணம் அறவிடப்பட்டுள்ளது. அதில் 5 இலட்சத்தை வைத்துக்கொண்டு மீதியை சிறுநீரக கொடையாளிக்கும் வைத்தியர்களுக்கும் ஏனையவர்களுக்கும் வழங்கியதாக பிரஜாபதி கூறியுள்ளார்.

இதுவரை 60 சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக பிரஜாபதி தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய தகவல்களின் பிரகாரம் இலங்கையிலுள்ள வைத்தியர்களுக்கும் தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது.

அதனடிப்படையில் இந்த பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த ஆறு வைத்தியர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.