நடிகர் வெற்றி நடிக்கும் 'ஈரப்பதம் காற்று மழை ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

08 Sep, 2025 | 06:28 PM
image

நடிகர் வெற்றி கதையின் நாயகர்களுள் ஒருவராக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஈரப்பதம் காற்று மழை' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை திரைப்பட தயாரிப்பாளர் எஸ். ஆர் . பிரபு - இயக்குநர் ரத்னகுமார் - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் - விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகியோர் இணைந்து அவர்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் சலீம் ஆர். பாட்ஷா இயக்கத்தில் உருவாகி வரும் 'ஈரப்பதம் காற்று மழை' எனும் திரைப்படத்தில் வெற்றி, கிஷன் தாஸ், தீப்தி உள்ளிட்ட பலர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

அமல் டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீராம் வெங்கடேஷ் இசையமைத்திருக்கிறார். சைக்காலஜிக்கல் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐ. பி. கார்த்திகேயன் தயாரித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து தற்போது படப்பிடிப்பு பிந்தைய இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right