தனுஷ் வெளியிட்ட செல்வராகவன் நடிக்கும் 'மனிதனும் தெய்வமாகலாம் ' பட ஃபர்ஸ்ட் லுக்

08 Sep, 2025 | 05:40 PM
image

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'மனிதனும் தெய்வமாகலாம் ' என பெயரிடப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.  இதனை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற நடிகர் தனுஷ் - அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகி வரும் 'மனிதனும் தெய்வமாகலாம்' எனும் திரைப்படத்தில் செல்வராகவன், குஷி ரவி, வை. ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா,  என். ஜோதி கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே ரவிவர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.கே. பிரியன் இசை அமைத்திருக்கிறார்.  இந்த திரைப்படத்தை வியோம் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயா சதீஷ் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''கிராமத்தில் நிகழும் பேரிடரால் அங்கு மக்களிடையே ஒற்றுமை குலைகிறது. இதனை தொடர்ந்து நாயகன் மக்களின் ஆதரவுடன் தனது கிராமத்தை காப்பாற்ற முடிவெடுக்கிறான். இது அவனை எப்படி தெய்வமாக உயர்த்துகிறது என்பதே இப்படத்தின் கதை ''என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்பு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். விரைவில் படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் பிரபாஸின் 'ஃபௌஜி'

2026-07-16 17:19:56
news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'வாணவேடிக்கை'...

2026-07-16 17:13:17
news-image

சுங்கத்துறை விசாரணையின் பின்னணியில் உருவாகும் நடிகர்...

2026-07-16 17:09:20
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் புதிய...

2026-07-16 17:06:29
news-image

நடிகர் ஆர். மாதவன் நடிக்கும் 'ஜி...

2026-07-16 17:02:50
news-image

விஜய் அண்டனி வெளியிட்ட பாலாஜி சக்திவேலின்...

2026-07-16 16:59:56
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51
news-image

சரத்குமார் 171

2026-07-15 15:04:54
news-image

அருள்நிதி நடிக்கும் 'அருள்வான்' படத்தின் அப்டேட்

2026-07-14 17:21:12
news-image

ட்ரெயின்' படத்தை கமல்ஹாசனால் கூட நடித்திருக்க...

2026-07-14 16:42:50
news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'ஆண்ட' டைட்டில் லுக்...

2026-07-14 16:40:34