ரஜினியுடன் இணைந்து நடிப்பதை உறுதிப்படுத்தினார் கமல்!

08 Sep, 2025 | 05:37 PM
image

நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கவுள்ளதை நடிகர் கமல்ஹாசன் உறுதி செய்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்களான கமலும் ரஜினியும் இணைந்து நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வந்தன.

இந்த நிலையில், சமீபத்தில் துபையில் நடைபெற்ற விருது விழாவில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன், இருவரும் இணைந்து நடிக்கவிருப்பதை உறுதி செய்துள்ளார்.

விருது விழாவை தொகுத்து வழங்கிய நடிகர் சதீஷ், 46 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்களும் ரஜினியும் இணைந்து நடிக்க இருப்பதாக வெளியான தகவல் உண்மையா? எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து கமல் பேசியதாவது:

“இருவரும் இணைந்து நீண்ட நாள் ஆகிறது. நாங்கள் விரும்பி பிரிந்திருந்தோம். ஒரு பிஸ்கட்டை இரண்டு பேரும் பகிர்ந்து சாப்பிட்டோம். பின், ஆளுக்கொரு பிஸ்கட் கிடைத்தது, அதை வாங்கி நன்றாக சாப்பிட்டோம். தற்போது மீண்டும் அரை பிஸ்கட் போதும் என்கிற மகிழ்ச்சி எங்களுக்குள் இருக்கிறது. அதனால், இணைந்துள்ளோம்.

எங்களுக்குள் போட்டி நீங்கள் ஏற்படுத்தியதுதான். எங்களுக்குள் போட்டியே இல்லை. வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம். அப்போதே இருவரும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டோம். அதைதான் கடைப்பிடித்து வருகிறோம். நாங்கள் இணைவது வணிக ரீதியாக பெரிய விஷயமே தவிர, எங்களுக்கு அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 46 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

தற்போது, கமல் 237 படத்திலும், ரஜினி ஜெயிலர் - 2 படத்திலும் நடித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து விரைவில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் கமல் கதாநாயகனாக நடித்த அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரஜினி. தொடர்ந்து, மூன்று முடிச்சு, 16 வயதினிலே என 18 படங்கள் இணைந்து நடித்தனர்.

இறுதியாக, 1985ஆம் ஆண்டு வெளியான ஜெராஃப்தார் என்ற ஹிந்தி படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சங்ககிரி ராஜ்குமாரின் கடுமையான உழைப்பு அவரை...

2026-08-18 16:56:47
news-image

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன்...

2026-08-18 16:52:00
news-image

ஆணவ கொலைக்கு எதிராக அழுத்தமான குரலை...

2026-08-18 16:35:24
news-image

ரஜினியின் 51 வருட திரைப்பயணம்!

2026-08-17 17:15:56
news-image

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும்...

2026-08-17 17:02:17
news-image

இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட 'ஆல் பாஸ்'...

2026-08-17 16:59:02
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் சூரியின்...

2026-08-17 16:41:23
news-image

சோனி விழா தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியை...

2026-08-17 16:40:55
news-image

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌஜி'...

2026-08-17 16:28:52
news-image

நடிகர் முனீஸ்காந்த்தின் 'தி டோர்ம்' படத்தின்...

2026-08-17 16:27:52
news-image

தெலுங்கு நடிகர் சாய் துர்கா தேஜ்...

2026-08-17 16:26:27
news-image

நடிகர் அசோக் குமார் பாலகிருஷ்ணன் நடிக்கும்...

2026-08-17 16:15:47