ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலவாக்கலையிலிருந்து யட்டியாந்தோட்டைக்கு சென்ற லொறியே மாலை 4 மணியளவில் பதையை விட்டு விலகி மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது .

இறப்பர் மரகுற்றிகளை தலவாக்கலையில் இறக்கி விட்டு மீண்டும் யட்டியாந்தோட்டை நோக்கி செல்கையில்  பாதை வழுக்கல் நிலையினால் லொறி சாரதியின் கட்டுபாட்டை மீறி விபத்துக்குள்ளானதாகவும் விபத்தினால் காயமுற்ற லொறியின் சாரதி மற்றும் உதவியாளருமாக இருவர் காயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.