மின்சார சபை மறுசீரமைப்பு : வேலை நிறுத்த எச்சரிக்கை!

08 Sep, 2025 | 05:46 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பில் தொழிற்சங்கங்கள்  முன்வைத்துள்ள பிரேரணைகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த தவறுமானால் தற்போது ஆரம்பித்துள்ள சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கையை வேலை நிறுத்தப் போராட்டம் வரை விரிவுபடுத்துவதாக  மின்சார சபையின் சுதந்திர சேவை சங்கத்தின் செயலாளர்  பிரபாத் பிரியன்த தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபை சுதந்திர சேவை சங்கம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், 

மின்சாரசபை மறுசீரமைப்புக்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. ஆனால் அரசாங்கம் நீதிமன்ற தீர்ப்புக்கு மாற்றமாகவே மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.அதனாலே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இதுதொடர்பாக 25 தொழிற்சங்கங்கள் கைச்சாத்திட்டு, 24 கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கிறோம். எமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுத்தரும்படி தெரிவித்து நாங்கள், கடந்த 4 நாட்களுக்கு முன்னர்  சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பித்தோம்.

ஆனால் எமது இந்த போராட்டம் தொடர்பில் அரசாங்க தரப்பில் இருந்து இதுவரை எந்த சாதகமான  பதிலும் கிடைக்கவில்லை. அரசாங்கத்தின்  நடவடிக்கையை பார்க்கும் போது, எமது இந்த போராட்டத்தை தொழிற்சங்க போராட்டம் வரை கொண்டுசெல்ல தூண்டும் வகையிலே இருக்கிறது.

அதனால் எமது கோரிக்கையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு தீர்மானித்திருந்தால், அது அரசாங்கம் எடுத்திருக்கும் மிகவும் பலவீனமான தீர்மானம் என்றே எமக்கு சொல்ல வேண்டி ஏற்படுகிறது.

எதிர்வரும்  16ஆம் திகதிக்கு எமது சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு நாங்கள் செல்வோம். இதன்போது மறுசீரமைப்பு குழுக்களில் இருந்து  விலகுவதற்கும் நாங்கள் தீர்மானம் எடுத்திருக்கிறோம். அதேநேரம் 16ஆம் திகதிக்கு பின்னர் சனி, ஞாயிறுக்கிழமை நாட்களில் எமது அனைத்து காரியாலயங்களையும் மூடிவிடுவதற்கும்  தீர்மானித்திருக்கிறோம். அதனால் எமது போராட்டத்தை இலகுவாக நினைக்க வேண்டாம் என நாங்கள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். 

எமது கோரிக்கைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தவறினால், அரசாங்கத்துக்கே பாதிப்பு ஏற்படும். அதனால்   21ஆம் திகதிக்கு பின்னர் வரலாற்றி ஒருபோதும் இடம்பெறாத பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்றுக்கு நாங்கள்  செல்வதற்கு வழி ஏற்படுத்த வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டெங்கு நுளம்பு பெருகும் வகையில் வளாகங்களை...

2026-07-11 15:52:56
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சேதங்கள் குறித்து...

2026-07-11 15:33:05
news-image

பொருளாதார நெருக்கடியை திசைதிருப்பவே கைதுகளும் குற்றத்தடுப்பு...

2026-07-11 15:32:14
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 166 பெண்...

2026-07-11 14:57:59
news-image

திறைசேரி நிதி மோசடி: 2.5 மில்லியன்...

2026-07-11 14:52:00
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: ஐநா மனித...

2026-07-11 14:40:33
news-image

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி 31 வயதுடைய...

2026-07-11 14:01:57
news-image

பதுளையில் தனியார் ஆய்வகங்களில் காலாவதியான மருத்துவ...

2026-07-11 13:19:57
news-image

நாட்டில் பலத்த காற்று வீசக்கூடும் :...

2026-07-11 13:10:48
news-image

நீதி அமைச்சர் குறித்து ரஞ்சன் ராமநாயக்கவின்...

2026-07-11 12:33:36
news-image

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக...

2026-07-11 12:36:14
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இடம்பெற்ற...

2026-07-11 12:18:21