நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்தது 'Gen-Z போராட்டம்' : 9 பேர் பலி

08 Sep, 2025 | 04:43 PM
image

நேபாள அரசாங்கம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகத் தளங்களுக்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து, தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல நகரங்களில் பாரிய இளைஞர் போராட்டங்கள் வெடித்தன. 

இந்த வன்முறை மோதல்களில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தப் போராட்டம், நேபாளத்தில் 'Gen-Z போராட்டம்' என்று அழைக்கப்படுகிறது.

சமூக ஊடக நிறுவனங்கள் நேபாளத்தில் தங்களைப் பதிவு செய்து, அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு இணங்காததால், 26 சமூக ஊடகத் தளங்களுக்கு அரசாங்கம் தடை விதித்தது. இந்தத் தடையானது, இளைஞர்களின் நீண்டகால வெளிப்பாடான ஊழல் மற்றும் பொருளாதார சமத்துவமின்மை போன்ற பிரச்சினைகளை வெளிப்படுத்தியது.

இன்று திங்கட்கிழமை (8) ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பாடசாலை மற்றும் கல்லூரி சீருடைகளுடன் "ஊழலை நிறுத்துங்கள், சமூக ஊடகங்களை அல்ல" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பாராளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.

போராட்டக்காரர்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய முயன்றபோது, பொலிஸார் அவர்களைத் தடுக்க கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதுடன் பலரது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர, காத்மாண்டுவில் உள்ளூர் நேரப்படி இரவு 10 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து :...

2026-07-11 16:41:25
news-image

என்னைத் படுகொலை செய்ய முயன்றால் ஈரான்...

2026-07-11 13:44:03
news-image

ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி : ஈரானிய...

2026-07-11 13:30:51
news-image

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் இரு...

2026-07-11 10:46:46
news-image

பிலிப்பைன்ஸில் மண்சரிவுகளில் சிக்கி 15 பேர்...

2026-07-11 09:55:09
news-image

எனக்கு எனது ஜனம்தான் முக்கியம் -...

2026-07-10 18:24:13
news-image

மீள்பயன்பாட்டு ரொக்கெட் தொழில்நுட்பத்தில் சீனா வரலாற்று...

2026-07-10 16:48:53
news-image

ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் புதிய...

2026-07-10 13:05:16
news-image

ஸ்பெயினில் காட்டுத்தீ: 12 பேர் உயிரிழப்பு,...

2026-07-10 10:32:12
news-image

சீனாவில் காலணித் தொழிற்சாலையில் பெரும் தீ...

2026-07-10 09:20:36
news-image

ஐரோப்பாவை உலுக்கும் வெப்பம்: ஜேர்மனியில் மாத்திரம்...

2026-07-09 16:22:55
news-image

ராஜஸ்தானில் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட...

2026-07-09 15:11:53