நவீன மற்றும் சமகாலக் கலைக்கான இலங்கை அருங்காட்சியகத்தின் கடந்த கண்காட்சியான ‘முழு நில அமைப்பு’ ற்காக நியமிக்கப்பட்ட அனோமா ராஜகருணாவின் (பி. 1965) ‘No More Land’ (2024) ஆவணப்படம் ஆனது இந்தியாவின் கொல்கத்தா நகரில் இடம்பெற்ற 8 வது தெற்காசிய குறும்பட விழாவில் (SASFF) சத்யஜித்ரே வெண்கல விருதினை வென்றுள்ளது என்பதை அறிவிப்பதில் MMCA இலங்கை பெருமை கொள்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் செயற்படும் SEDR செயற்திட்டத்துடன் இணைந்து பணியாற்றும் ‘Arts 4 ADR’ன் ஒரு பகுதியாக MMCA இலங்கையால் நியமிக்கப்பட்ட மூன்று கலைப்படைப்புகளில் ஒன்று ‘No More Land’ (2024) ஆகும்.
இலங்கையில் சுதந்திரத்திற்குப் பிந்தைய முதலாவது மீள்குடியேற்ற மற்றும் விவசாய அபிவிருத்தித் திட்டமான கல் ஓயா செயற்திட்டத்தினைச் சூழவுள்ள விவசாயக் காணிப் பிணக்குகள் குறித்த நீண்ட காலப் பிரச்சினைகள் பற்றிப் பேசுகிறது ‘No More Land’ (2024).
அபிவிருத்தியின் ஒரு மைல்கல்லாக இச் செயற்திட்டம் கருதப்படும் அதேவேளையில், இந்தத் திட்டமனது பரவலான இடப்பெயர்ச்சி, சொத்திழப்பு என்பவற்றுடன் அதிகளவில் இனங்களுக்கிடையிலான பதட்டம் அதிகரிக்கவும் காரணமாக அமைந்தது.
‘No More Land’ (2024) வேறுபட்டு நிற்கக் காரணம் இக் கதையைச் சொல்ல பெண்களின் குரல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது ஆகும். இச் செயற்திட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட அம்பாறையில் வாழும் வெவ்வேறு இனப் பின்னணியைக் கொண்ட பதினொரு பெண்களின் சாட்சியங்களை ராஜகருணா முன்னெடுத்துச் செல்கிறார்.
அத்துடன் நிலத்துடனான காட்சிகளுடன் மேவிச் செல்லும் அவர்களின் வாய்வழி வரலாறுகள் இடப்பெயர்வுடன் பின்னிப் பிணைந்து காணப்படும் நினைவுகளை வெளிப்படுத்துக் காண்பிக்கும் மனதில் அச்சம் விளைவித்தாலும் கவிதையாகக் கொட்டும் கதை போல உருவாகியுள்ளது.
MMCA இலங்கையின் பிரதான எடுத்தாளுநர் ஷாமினி பெரேரா, “இந்த விருது அனோமாவிற்கும் அருங்காட்சியகத்திற்கும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. இலங்கையின் சிக்கலான வரலாறுகளுடனும் தற்போதைய யதார்த்தங்களுடனும் தொடர்புடைய சமகால படைப்புகளை நியமிப்பதன் முக்கியத்துவத்தை இது வெளிப்படுத்தி நிற்கிறது,” எனக் கூறுகிறார்.
“புதிய படைப்புகளை உருவாக்குவதில் இலங்கை கலைஞர்களை ஆதரிப்பது MMCA இலங்கையில் எங்கள் நோக்கங்களில் ஒன்றாகும். பெண்களின் குரல்களை முன்னுக்குக் கொணர்வதில் அனோமாவின் திறன் துணிச்சலானதும் அவசியமானதும் ஆகும். அத்துடன், நாட்டில் நிலவும் நிலப்பிரச்சனைகளின் சிக்கலான தன்மை குறித்த இம் மனங்கவர் படைப்பை அவர் உணர்ந்து கொள்வதில் அவருக்கு ஆதரவளித்ததையிட்டு நாம் பெருமைப்படுகிறோம்,” என அவர் மேலும் தெரிவித்தார்.
SEDR செயற்திட்டமானது ஏஷியா ஃபௌண்டேஷனுடன் இணந்து பிரிட்டிஷ் கௌன்ஸில் நடைமுறைப்படுத்தும் செயற்திட்டமாகும்.
இவ் வெற்றி குறித்து பிரிட்டிஷ் கௌன்ஸிலின் இலங்கைக்கான பணிப்பாளர் ஓலாண்டோ எட்வேட்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “‘No More Land’ இத் தகுதியான அங்கீகாரம் பெறுவதையிட்டு நாம் அளவற்ற பெருமை கொள்கிறோம். SEDR செயற்திட்டத்தின் ஒரு பகுதியான Arts 4 ADR முயற்சியின் மூலம் பிரதிபலிப்பு, உரையாடல் மற்றும் சமூக மாற்றத்தைக் கைக்கொண்டு கதைசொல்லல் மற்றும் கலைகள் எவ்வளவு சக்தி வாய்ந்ததாக அமைய முடியும் என்பதை நாம் கண்டோம்,” எனக் கூறினார்.
“இவ் வெற்றிக்காகவும் எமது சமூகங்களுக்கு உருத் தரும் இச் சிக்கலான யதார்த்தங்களை வெளிக்கொணர்ந்தமைக்காகவும் இலங்கையின் பிரிட்டிஷ் கௌன்ஸிலுடன் மிக நீண்ட காலத் தொடர்புடைய அனோமா ராஜகருணா அவர்களுக்கும் MMCA இலங்கையில் பணியாற்றும் சிறப்பான குழுவினருக்கும் வாழ்த்துகள்,” என மேலும் அவர் தெரிவித்தார்.
சமகால கலை நடைமுறைகளை வளர்த்தெடுப்பதற்கும், உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய சமூக மற்றும் வரலாற்றுப் பிரச்சினைகள் குறித்துப் பேசும் படைப்புகளுக்கு இடமளிக்கவும் எனப் பணியாற்றும் MMCA இலங்கையின் அர்ப்பணிப்பை அழுத்திக் காண்பிக்கிறது SASFF ல் ‘No More Land’ (2024) க்குக் கிடைத்த அங்கீகாரம்.
இலங்கையில் நவீன மற்றும் சமகால கலைகளுக்கான முதல் அர்ப்பணிப்பான அருங்காட்சியகமாக 2019 ம் ஆண்டு நிறுவப்பட்ட MMCA இலங்கையானது, பார்வையாளர்களை கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் பற்றி விமர்சன ரீதியாக சிந்திக்க சவால் விடும் கலைப்படைப்புகளை உருவாக்கி வழங்குவதைப் பணியாகக் கொள்ள வேண்டுமெனும் பணி இலக்கை ஈட்டிக் கொண்டுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM