கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 'தேசிய பாடசாலைகள் தொழில்முனைவோர் விருதுகள் செயற்திட்டம் 2025”, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் கொழும்பு 07 இல் உள்ள நெலும் பொக்குண அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இளம் தொழில்முனைவோரை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மக்கள் வங்கியின் புதிய முயற்சியான, ‘People’s BizTeens Challenge 2025’ திட்டத்தை இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஆரம்பித்து வைத்துள்ளது.
இந்நிகழ்வில், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜெயசுந்தர, மக்கள் வங்கியின் தலைவர் பேராசிரியர் நாரத பெர்னாண்டோ, பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா, இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தலைவர் ரவி நிசங்க, மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (தனிநபர் வங்கிச்சேவை செயல்பாடுகள் மற்றும் வெளிநாட்டு பரிவர்த்தனை சேவைகள்) அருணி லியனகுணவர்தன, உதவிப் பொது முகாமையாளர் (தனிநபர் வங்கிச்சேவை) நளின் பெரேரா மற்றும் மக்கள் வங்கி மற்றும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஆகியவற்றின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM