நாட்டில் ஆண்டுதோறும் ரூ.180 பில்லியன் பெறுமதியான பழங்களும் காய்கறிகளும் வீணாகின்றன

08 Sep, 2025 | 12:27 PM
image

நாட்டில் ஆண்டுதோறும் அறுவடை மற்றும் விற்பணைகளுக்கு பின்னர் ரூ.180 பில்லியன் பெறுமதியளவிலான பழங்களும் காய்கறிகளும் வீண்விரயம் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கினறன. 

இவ்வாறு வீண்விரயம் செய்யப்படுகின்ற பழங்கள் மற்றும் காய்கறிகள் நாட்டில் வாழும் மக்களுக்கு  இரண்டு முதல் நான்கு மாதங்களுக்கு உணவளிக்க போதுமானது என தெரிவிக்கப்படுகின்றன.

போக்குவரத்தின் போது மாத்திரம்  ஆண்டுதோறும் 500,000 மெட்ரிக் தொன்களுக்கும் அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகள்  வீண்விரயமாகின்றன. 

மேலும் அறுவடைகளின் போதும் சுமார் 30 சதவீதம் தொடக்கம்  40 சதவீத வரையிலான பழங்கள் மற்றும் காய்கறிகள்  வீண்விரயமாகின்றன. 

இதன் காரணமாக விவசாயிகள் மற்றும் சில்லறை விற்பணையாளர்கள் பாரியளவில் விளைவுகளை சந்திக்கின்றனர்.  

இருப்பினும், விவசாயிகள், இடைத்தரகர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட  வழிகாட்டுதல்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பின்பற்றத் தவறுவதாலேயே பழங்கள் மற்றும் காய்கறிகள் வீண்விரயமாக்கப்படுகின்றன. 

மேலும், விவசாயிகள் மற்றும் சில்லறை விற்பணையாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றினால் 5.7 சதவீதமா பழங்கள் மற்றும் காய்கறிகள் வீணாகுவதை தடுக்கலாம் என தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷங்காய் மாநாட்டிற்கு செல்லும் ஜனாதிபதி அநுர

2026-08-16 08:55:06
news-image

ஆகஸ்ட் 30-இல் சர்வதேச மாநாடு: காணாமல்...

2026-08-16 08:56:43
news-image

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரிடமிருந்து கிடைக்கும்...

2026-08-16 11:34:51
news-image

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சரை...

2026-08-16 09:28:15
news-image

‘ஸ்பைடர் வுமன்’ என்றழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரி...

2026-08-16 08:40:39
news-image

சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி வழி...

2026-08-16 08:39:58
news-image

22 ஆவது திருத்தம் செவ்வாய் பாராளுமன்றில்...

2026-08-16 08:39:12
news-image

இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சி 4 -...

2026-08-16 09:24:32
news-image

சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’...

2026-08-16 08:36:01
news-image

கடுவலை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து...

2026-08-16 10:06:59
news-image

டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெக்கியா திட்டம்  ஆரம்பம்

2026-08-16 09:57:27
news-image

ஒரு வருடத்தில் 63 பாதாள உலகக்...

2026-08-16 08:35:00