தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் பொதுஜன நூலகம் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவினால் ஞாயிற்றுக்கிழமை (7) திறந்து வைக்கப்பட்டது.
பலாலி வீதி, கந்தர்மடத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி பொதுமக்கள் தொடர்பு காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) மாலை 5 மணியளவில் குறித்த நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கடற்றொழில் மற்றும் கடல்வளங்கள் துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி உள்ளிட்ட அக்கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கட்சி ஆதரவாளர்களால் நூலகத்திற்கு அன்பளிப்பாக நூல்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை யாழ் ஊடக அமையத்தினரால் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிடம் கையளிக்கப்பட்டது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM