போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும் கட்சிக்குமிடையில் எவ்வித தொடர்பும் கிடையாது - சாகர காரியவசம்

07 Sep, 2025 | 09:48 PM
image

(இராஜதுரை ஹஷான்)

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும்,கட்சிக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமா என்பது சந்தேகத்துக்குரியது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (07)  நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

போதைப்பொருள் குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர்  கட்சியில் இருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார்.

இவருக்கும்,கட்சிக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது.நபர்களின் தனிப்பட்ட செயற்பாடுகளுக்கு கட்சி பொறுப்புக்கூற முடியாது.அவ்வாறு பொறுப்புக்கூற வேண்டுமாயின் மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக்கூற வேண்டும்.

ஏனெனில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர் இப்ராஹிமின் இரண்டு மகன்மார்கள் தான் தற்கொலை குண்டுதாரிகளாக மாறி உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை நடத்தினார்கள்.ஆகவே குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படுவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமா என்பது சந்தேகத்துக்குரியது.அரசாங்கம் இதனை தனது முழுமையான அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக...

2026-08-12 00:34:35
news-image

இலங்கையில் ஐ- போன் பயன்படுத்துவோருக்கு கவலை...

2026-08-12 00:28:07
news-image

மகாநாயக்க தேரர்களின் முக்கிய கடிதம் மாயம்...

2026-08-11 12:40:04
news-image

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான மகாநாயக்க...

2026-08-11 15:07:40
news-image

அரசியல் பழிவாங்களுக்கு பொலிஸ் திணைக்களம் பயன்படுத்தப்படுகிறது...

2026-08-11 15:06:43
news-image

சர்வாதிகார யுகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை...

2026-08-11 16:12:43
news-image

இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புவோருக்கு குடிவரவு ஒப்புதல்...

2026-08-11 17:08:28
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பு: மகாநாயக்க தேரர்களின்...

2026-08-11 17:07:04
news-image

பிரதம நீதியரசர், நீதிபதிகள் மீது எதிர்க்கட்சியினர்...

2026-08-11 17:37:53
news-image

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்துக்கு பதிலாக...

2026-08-11 17:37:11
news-image

சிறைச்சாலை பாதுகாப்பிற்கு ஓய்வு பெற்ற இராணுவ...

2026-08-11 17:17:44
news-image

அரச அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள் அடிப்படைச் சம்பளத்துடன்...

2026-08-11 17:47:45