அரசியல் பழிவாங்கலுக்காக உதய கம்மன்பிலவை கைது செய்ய முயற்சி : எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்கிறது பிவிதுறு ஹெல உறுமய 

07 Sep, 2025 | 09:51 PM
image

(இராஜதுரை ஹஷான்)

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சோடிக்கப்பட்ட சாட்சியை அடிப்படையாகக் கொண்டு கடற்படையின் முன்னாள் தளபதி நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டார் என்று உதய கம்மன்பில குறிப்பிட்டதால் இனங்களுக்கிடையில் எவ்வித முரண்பாடுகளும் ஏற்படவில்லை. அரசியல் பழிவாங்கலுக்காகவே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை ஐ.சி.சி.பி.ஆர்.சட்டத்தின் பிரகாரம் கைது செய்ய முயற்சிக்கிறது. இதற்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிடம் வலியுறுத்தியுள்ளது.

பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் உட்பட உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம்,அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது. 

இதன்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அரசாங்கத்தின் குறைப்பாடுகள் மற்றும் ஊழல் மோசடிகளை பகிரங்கமாக சுட்டிக்காட்டி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மக்களுக்காக செயற்பட்டார். உதய கம்மன்பிலவை கைது செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்ட சகல முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன.

2025.08.05 ஆம் திகதியன்று ஊடக சந்திப்பை நடத்தி விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சோடிக்கப்பட்ட சாட்சியை அடிப்படையாகக் கொண்டு கடற்படையின் முன்னாள் தளபதி நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டார் என்று உதய கம்மன்பில குறிப்பிட்டிருந்தார். இந்த கூற்றில் எந்தவொரு இனத்தையும் அவர் குறிப்பிடவில்லை. அரசியலமைப்பின் 14(1) அளிக்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்துக்கு அமைவாகவே அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

ஊடக சந்திப்பை நடத்தி உதய கம்மன்பில குறிப்பிட்ட கருத்தினால் இனங்களுக்கிடையில் முரண்பாடு ஏற்படும் என்று குறிப்பிட்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயம் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 120 ஆவது பிரிவின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்கம் கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு பி அறிக்கை சமப்பித்துள்ளது.

உரிய காரணிகள் ஏதுமின்றி சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயம் சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்டால் பிணை பெற்றுக்கொள்வது கடினமானதாக அமையும். ஆகவே அரசாங்கத்தின் அடக்குறைகளுக்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக் கடற்படையின் படகு விபத்து: தொடரும்...

2026-08-16 13:04:58
news-image

ஷங்காய் மாநாட்டிற்கு செல்லும் ஜனாதிபதி அநுர

2026-08-16 08:55:06
news-image

ஆகஸ்ட் 30-இல் சர்வதேச மாநாடு: காணாமல்...

2026-08-16 08:56:43
news-image

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரிடமிருந்து கிடைக்கும்...

2026-08-16 11:34:51
news-image

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சரை...

2026-08-16 09:28:15
news-image

‘ஸ்பைடர் வுமன்’ என்றழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரி...

2026-08-16 08:40:39
news-image

சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி வழி...

2026-08-16 08:39:58
news-image

22 ஆவது திருத்தம் செவ்வாய் பாராளுமன்றில்...

2026-08-16 08:39:12
news-image

இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சி 4 -...

2026-08-16 09:24:32
news-image

சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’...

2026-08-16 08:36:01
news-image

கடுவலை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து...

2026-08-16 10:06:59
news-image

டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெக்கியா திட்டம்  ஆரம்பம்

2026-08-16 09:57:27