ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இரசாயனப் பொருள் தங்காலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தங்காலையில் உள்ள நெடோல்பிட்டியவில் உள்ள தனியார் காணியொன்றில் ஞாயிற்றுக்கிழமை (07) காலை ஐஸ் உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகளிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய, தங்காலையில் உள்ள வெலிவெண்ணா குறுக்கு வீதியை அண்மித்துள்ள காணியொன்றில் பொலிஸ் அதிகாரிகள் இன்று காலை விசேட சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது, வெள்ளை இரசாயனப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பொருட்கள் நேற்று மித்தேனியாவின் தலாவவில் உள்ள காணியொன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருள்களுடன் ஒத்திருப்பதாகவும், அவை ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரசாயனப் பொருள்கள் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டு அந்த இடத்தில் விடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட இரசாயனங்கள் மேலதிக விசாரணைக்காக தங்காலை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM