ஷங்காய் மாநாட்டிற்கு அழைக்கப்படாமை மூலோபாய முடிவு : இலங்கை, சீன உறவு உச்சத்தில் உள்ளது - வெளிவிவகார பேச்சாளர்

07 Sep, 2025 | 09:46 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை அடிப்படையாக கொண்டு இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை மதிப்பிட முடியாது. இருநாட்டு உறவுகளும் நல்ல நிலையில் உள்ளன. இருப்பினும் ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு அழைக்கப்படாமை அந்நாட்டின் மூலோபாய முடிவு என தெரிவித்த வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ,  பொறுப்புள்ள ஊடகங்கள் பொதுமக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும். மேலும், யதார்த்தங்களையும், கள நிலவரங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ மேலும் குறிப்பிடுகையில்,

ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது ஒரு வேறுபட்ட விடணமாகும். இந்த அமைப்பில் இலங்கை நிரந்தர உறுப்பினராக அல்லாது, ஒரு உரையாடல் பங்காளியாகவே உள்ளது.  இலங்கையை போன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் கத்தார் உள்ளிட்ட 14 நாடுகள் உரையாடல் பங்காளிகளாக உள்ளன. இந்த 14 நாடுகளில் பெரும்பாலான நாடுகளுக்கு இம்முறை அழைப்பு விடுக்கப்பட வில்லை. இலங்கைக்கு அழைப்பு வராதபோது, பொதுவாக அதில் நாம் கலந்து கொள்வதில்லை.

இதற்கான முக்கிய காரணம், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு தற்போது உச்சத்தில் உள்ளது. ஏனெனில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனவரி மாதத்தில் சீனாவுக்கு விஜயம் செய்தார். பொதுவாக, அந்த காலப்பகுதியில் அவர்கள் எந்த ஒரு நாட்டுத் தலைவர்களையும் அழைப்பதில்லை. ஆனால், இந்த ஆண்டுக்கான முதல் அரசுமுறை விஜயமாக இலங்கையின் ஜனாதிபதி அழைக்கப்பட்டிருந்தார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே மிகவும் நெருக்கமான இருதரப்பு உறவுகள் உள்ளன. வரும் ஒக்டோபர் மாதத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவும் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். எனவே, இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை இந்த விஜயங்களின் ஊடாக புரிந்துகொள்ள முடிகிறது.

இருப்பினும் சில ஊடகங்களால் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை காணமுடிகிறது. இது போலியான தகவலும், தவறான புரிதல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்ற விடயங்களாகும். இது உண்மை இல்லை. பொறுப்புள்ள ஊடகங்கள் பொதுமக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும். மேலும், யதார்த்தங்களையும், கள நிலவரங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 'சீனா இந்த அரசாங்கத்தை ஆதரிக்கவில்லை' என்று சிலர் கூறுவதில் உண்மையில்லை. தவறான தகவல்களைக் வழங்கி மக்களை ஏமாற்றக் கூடாது.

உண்மை நிலைமை என்னவென்றால், இரண்டு உயர்மட்ட விஜயங்கள் நடந்தும், நடக்கவும் உள்ளன. முதல் விஜயம் ஜனவரியில் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டது. அந்த அரசுத் தலைவர் விஜயத்தின் போது அனைத்து விவகாரங்களும் குறித்தும் பரந்துப்பட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. ஒரு நாட்டுத் தலைவரின் வெளிநாட்டு விஜயம் எவ்வளவு முக்கியமானது என்பது உங்களுக்குத் தெரியும். எனவே இதன் போது அனைத்து கொள்கை விவகாரங்களும் விவாதிக்கப்பட்டன. அதேபோன்று ஒக்டோபர் மாத்திலும் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் உயர்மட்ட விஜயம் நடக்கவுள்ளது.

எனவே, இருநாட்டு உறவுகளும் நல்ல நிலையில் உள்ளன. இந்த ஆண்டு மாலத்தீவுகள் மற்றும் நேபாளம் போன்ற நாடுகள் முன்பு அழைக்கப்படவில்லை. ஆனால், இம்முறை அழைக்கப்பட்டுள்ளனர், ஏனென்றால் இது சீனாவின் சொந்த மூலோபாய முடிவுகளைப் பொறுத்தது. ஆனால் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் உச்சத்தில் உள்ளன என்பதை அறிந்திருக்கிறார்கள். ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை அடிப்படையாக கொண்டு இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை மதிப்பிட முடியாது. ஷங்காய் ஒத்துழைப்பில் நாம் உரையாடல் பங்காளிகளாக முன்னேறி வருகிறோம் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். இணைப்புக்கு எதிர்ப்பு; தொழிற்சங்கங்கள்...

2026-07-17 14:34:16
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் : வழக்கு...

2026-07-17 16:18:43
news-image

புகைப்பிடிப்பதால் தினமும் 50 உயிரிழப்புகள்; ஆண்டுக்கு...

2026-07-17 16:19:13
news-image

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது...

2026-07-17 16:19:41
news-image

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்...

2026-07-17 16:20:09
news-image

மண்ணெண்ணெயில் இயங்கிய 100 பஸ்கள் அடையாளம்;...

2026-07-17 22:26:04
news-image

அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு...

2026-07-17 22:20:42
news-image

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு...

2026-07-17 22:08:58
news-image

தொழிற்கல்வியை வலுப்படுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில்...

2026-07-17 22:06:56
news-image

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்...

2026-07-17 21:48:04
news-image

சிறுபான்மைக் கட்சிகளின் புதிய கூட்டணி எமக்குத்...

2026-07-17 14:35:02
news-image

ஊழியர்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது...

2026-07-17 16:33:07