நரம்பியல் சிக்கல்களை துல்லியமாக அவதானிக்க உதவும் நவீன பரிசோதனை முறை

06 Sep, 2025 | 03:40 PM
image

எம்முடைய நரம்பியல் மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குறிப்பாக மூளை, தண்டுவடம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்க இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி எனும் நவீன பரிசோதனை  முறை பலன் அளித்து வருவதாக வைத்தியம் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

நரம்பியல் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும் , பாதிப்பு ஏற்பட்டிருக்கும் இடத்தை துல்லியமாக அவதானிக்கவும்,  இண்டர்வென்ஷனல் ரேடியாலஜி எனும் பரிசோதனை முறை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.

ஏனெனில் இத்தகைய பரிசோதனை முறை பாதுகாப்பானதாகவும், துல்லியமானதாகவும் , ஏனைய பரிசோதனை முறைகளை விட விரைவானதாகவும் இருக்கிறது என வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ரேடியாலஜி எனப்படும் கதிர்வீச்சியல் துறையில் புதிதாக வளர்ந்து வரும் துணை பரிசோதனை முறையாக இண்டர்வென்ஷனல் ரேடியாலஜி பிரிவு திகழ்கிறது. இந்த பரிசோதனை முறையில் சிடி ஸ்கேன்- அல்ட்ரா சவுண்ட்- எக்ஸ்ரே -ஆகிய நோயறி பரிசோதனை முறை- ஒருங்கிணைக்கப்பட்ட அம்சமாகும்.

இந்த தருணத்தில் தோல், தமனி, சிரை ஆகியவற்றின் வழியாக சிறிய நுண்ணிய குழாயை உட்செலுத்தி பாதிப்பின் தன்மையையும் , வீரியத்தையும் துல்லியமாக அவதானிக்க இயலும். மேலும் இத்தகைய பரிசோதனையின் போது பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து எளிதாக திசு பரிசோதனையையும் மேற்கொள்ள இயலும். அத்துடன் பாதிப்பிற்கான பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மற்றும் பிரத்யேக நுண் துளை சத்திர சிகிச்சையையும் மேற்கொள்ள இயலும்.

வைத்தியர் நரேன் தொகுப்பு அனுஷா.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலக்குடலில் ஏற்படும் கட்டிகளை அகற்றி நிவாரணமளிக்கும்...

2026-08-14 14:28:38
news-image

நாட்பட்ட நோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-08-13 18:12:25
news-image

மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் எக்ஸ்ட்ராகார்போரியல்...

2026-08-13 18:14:22
news-image

நுரையீரல் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-08-12 16:05:53
news-image

சர்கோயிடோசிஸ் எனும் அரிய பாதிப்பிற்கான நவீன...

2026-08-11 16:51:59
news-image

டகோட்சுபோ கார்டியோமயோபதி எனும் இதய பாதிப்பிற்குரிய...

2026-08-10 15:50:50
news-image

விர்ச்சுவல் ஒட்டிசம் எனும் மெய்நிகர் ஒட்டிச...

2026-08-07 16:13:19
news-image

பித்த நாள அடைப்பை சீராக்கும் நவீன...

2026-08-06 18:37:33
news-image

கார்டியாக் மைக்ஸோமா எனும் இதயத்தில் ஏற்படும்...

2026-08-05 17:02:41
news-image

தசை இறுக்கத்திற்கு நிவாரணமளிக்கும் பனிக்கட்டி குளியல்...

2026-08-04 15:26:44
news-image

ப்ரௌன் ஃபேட் எனும் பழுப்பு கொழுப்பு...

2026-08-01 17:00:28
news-image

குரல் வளை முடிச்சு அல்லது குரல்...

2026-07-31 16:37:19