உங்களுடைய அனுபவத்தின் மூலமாக கிடைத்த திறமையை முதலீடாக பயன்படுத்தி, தொழில் செய்து அதில் உங்களது வாழ்வாதாரத்தை உருவாக்குகிறீர்கள் என்றால் சில தருணங்களில் அந்தத் தொழிலில் லாபம் வருவதில் குறை ஏற்படக்கூடும் அல்லது லாபம் வந்தாலும் சேமிப்பு என்று எதுவும் தங்காமல் கடன் பெருகிக்கொண்டே இருக்கும் அல்லது தொழிலில் சுணக்க நிலை அல்லது மந்த நிலை ஏற்பட்டு கடன் சுமையும், கடன் கொடுத்தவர்களின் நெருக்கடியும் அதிகரிக்கும்.
இதன் காரணமாக உளவியல் ரீதியிலான வலிமையை இழந்து பலவீனமாகி, விரக்தி நிலைக்கு சென்று விடுவார்கள். இதுபோன்ற சூழலில் சிக்கிக் கொண்டு தவிப்பவர்களுக்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு மாற்று உபாயத்தை அதாவது பிரத்யேக வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.
இத்தகைய பாதிப்பிற்கு கேதுவின் தோஷமே மூல காரணமாக முன்னிறுத்தப்படுகிறது. கேதுவின் தோஷம் விலக வேண்டும் என்றால் ... கேதுவின் அம்சமாக கருதப்படும் விநாயகர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமைகளில் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சென்று சிறிதளவு அருகம்புல்லை சாற்றி 21 முறை வலமிருந்து இடமாக விநாயகரை சுற்றி வந்து பிரார்த்திக்க வேண்டும்.
மேலும் இத்தகைய வழிபாட்டை சங்கடஹர சதுர்த்தி- விநாயகர் சதுர்த்தி ஆகிய விசேடமான நாட்களில் பிள்ளையாருக்கு பச்சை வண்ணத்திலான புது வஸ்திரத்தை சாற்றி, அருகம்புல்லை அர்ப்பணம் செய்து, 'ஓம் கேதவே நமஹ' எனும் மந்திரத்தை 108 முறை உச்சரித்தால்... கடுமையான கேது தோஷமும் குறைந்துவிடும். கேது பகவானால் சுப பலன்கள் கிடைக்கும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM