வழியில் விழுந்த இருள் நொடியில்,
வாகனம் ஓடும் வேகம் உயிரை பறிக்கலாம்.
சிறிய கவனக் குறைவு கூட,
சிறந்த வாழ்க்கையை சிதைக்கக் கூடும்.
அவசரப் பயணத்தின் பித்தலாட்டம்,
அன்பின் குரலை மௌனமாக்கும்.
ஒரு விபத்து நிகழ்ந்த பின்னர்,
உளவியல் காயம் என்றும் ஆறாது.
மரணத்தைத் தாண்டி உயிர் வாழ்ந்தாலும்,
மனதில் பதியும் பயம் நீங்காது.
ஒவ்வொரு சத்தமும் அதிர்ச்சியாய்,
ஒவ்வொரு சாலையும் கண்ணீராய்.
சக்கரத்தின் சத்தம் சிந்தையை துளைக்கும்,
மறந்துவிடாத காட்சிகள் கனவாக வரும்.
வாழ்க்கை பாதையில் ஒரு தவறான திருப்பு,
மனதின் பாதையில் ஆயுள் முழுதும் சுமை.
ஆனால் – விழிப்புணர்வு தான் கவசம்,
அது காக்கும் உயிரையும் மனதையும்.
சிக்னலின் சிவப்பு நிறம் கற்றுக் கொடுக்கும் –
"நிமிடம் தாமதம், ஆனால் உயிர் முழுமை!"
பாதுகாப்புக் கட்டு ஒரு நூல் அல்ல,
அது உயிரின் உறுதியான சங்கிலி.
தொலைபேசியில் ஒரு வார்த்தை கூட,
நொடியில் உயிரை பறிக்கக் கூடும்.
பாதுகாப்பு நெறி மதித்தால்,
மன அமைதி என்றும் நிலைக்கும்.
வாழ்க்கை இனிதாக தொடர,
விழிப்புணர்வே சிறந்த மருந்து.
நம் மனமும் உடலும் காப்பாற்ற,
ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும் –
"விபத்தைக் கட்டுப்படுத்துவது எளிது,
ஆனால் இழந்த உயிரை மீட்டிட முடியாது!"
நடராசா கோபிராம்
உளவியல்சிறப்புக்கலைமாணவன்
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM