எல்ல பஸ் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்ய விரைந்து வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

06 Sep, 2025 | 11:06 AM
image

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் வியாழக்கிழமை (04) இரவு பஸ் விபத்து இடம்பெற்ற போது காயமடைந்தவர்களுக்கு உதவி செய்ய பெருமளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விரைந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

விபத்து நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் இருந்த பல சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி வழங்கியுள்ளதுடன் அவர்களை மீட்பு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தவும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லவும் உதவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

மருத்து சேவையில் உள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வைத்தியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு உதவி செய்துள்ளனர். 

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இரவு முழுவதும் பிரதேசவாசிகள் மற்றும் இராணுவ வீரர்களுடன் இணைந்து காயமடைந்தவர்களுக்கு உதவி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“பணவீக்கம் உயரும் நிலையில் அதிகரித்த மஹபொல...

2026-07-23 05:14:49
news-image

ஜி.எஸ்.பி.+ உட்பட அனைத்து சலுகைகளையும் நிறுத்துங்கள்...

2026-07-23 05:09:09
news-image

டிஜிட்டல் நிர்வாக, ஊழல் ஒழிப்பு நடவடிக்கை...

2026-07-22 18:14:00
news-image

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின்...

2026-07-22 12:54:12
news-image

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை உருவாக்கும்...

2026-07-22 17:34:35
news-image

காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக...

2026-07-22 14:18:56
news-image

ஜனாதிபதி மாளிகைகளை பயனுள்ள முறையில் பயன்படுத்த...

2026-07-22 14:50:18
news-image

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை...

2026-07-22 14:49:18
news-image

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயத்துக்கான மக்கள்...

2026-07-22 14:52:16
news-image

புகையிரத சேவையை நவீனமயமாக்க 2027–2029 அபிவிருத்தித்...

2026-07-22 23:07:26
news-image

வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால்...

2026-07-22 15:49:49
news-image

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு, 106 பேர்...

2026-07-22 14:52:40