செனன் பகுதியில் பாரவூர்தியும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து!

06 Sep, 2025 | 09:57 AM
image

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் செனன் பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியும் முச்சக்கரவண்டியும்  மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்து வெள்ளிக்கிழமை (05) மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த சிறு குழந்தை ஒன்று  படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவையில் எரிபொருள் விநியோக நிலையத்திலிருந்து கொட்டகலை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் சேமிப்பு வளாகத்திற்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றே முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதாகவும், பாரவூர்தியில் இருந்து எரிபொருளை இறக்கிய பின்னர் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். இணைப்புக்கு எதிர்ப்பு; தொழிற்சங்கங்கள்...

2026-07-17 14:34:16
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் : வழக்கு...

2026-07-17 16:18:43
news-image

புகைப்பிடிப்பதால் தினமும் 50 உயிரிழப்புகள்; ஆண்டுக்கு...

2026-07-17 16:19:13
news-image

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது...

2026-07-17 16:19:41
news-image

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்...

2026-07-17 16:20:09
news-image

மண்ணெண்ணெயில் இயங்கிய 100 பஸ்கள் அடையாளம்;...

2026-07-17 22:26:04
news-image

அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு...

2026-07-17 22:20:42
news-image

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு...

2026-07-17 22:08:58
news-image

தொழிற்கல்வியை வலுப்படுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில்...

2026-07-17 22:06:56
news-image

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்...

2026-07-17 21:48:04
news-image

சிறுபான்மைக் கட்சிகளின் புதிய கூட்டணி எமக்குத்...

2026-07-17 14:35:02
news-image

ஊழியர்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது...

2026-07-17 16:33:07