மதராஸி - திரைப்பட விமர்சனம்

05 Sep, 2025 | 05:38 PM
image

மதராஸி - திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : ஸ்ரீ லட்சுமி மூவிஸ்

நடிகர்கள் : சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜாம்வால், பிஜு மேனன், சபீர் கல்லரக்கல் , விக்ராந்த் , 'தலைவாசல்' விஜய் மற்றும் பலர்.

இயக்கம் : ஏ. ஆர். முருகதாஸ்

மதிப்பீடு : 2.5 / 5

'அமரன்' எனும் பிரம்மாண்டமான வெற்றி படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருப்பதாலும்... இரண்டு பிரம்மாண்டமான பட்ஜட் படங்களின் தோல்விக்கு பிறகு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருப்பதாலும் , 'மதராஸி' படத்திற்கு ரசிகர்களிடம் எந்த வித பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியானது. இதற்கு ரசிகர்களின் எதிர்வினை எப்படி இருந்தது?  என்பதை தொடர்ந்து காண்போம்.

விராட் ( வித்யூத் ஜாம்வால்) - சிராக் ( ஷபீர் கல்லரக்கல்) எனும் இரண்டு நண்பர்கள் ஒன்றிணைந்து அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரத்தை பரவ செய்ய திட்டமிடுகிறார்கள். இதற்காக ஆறு லொறியில் தொன் கணக்கில் துப்பாக்கிகளை சட்டவிரோதமாக கடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் ரகுராம் ( சிவகார்த்திகேயன்) எனும் இளைஞர் பல் வைத்திய படிப்பை பயிலும் மாணவியான மாலதி( ருக்மணி வசந்த்) யை கண்டதும் காதலிக்கிறார். மாலதி- ரகுராமின் மனித நேய பணிகளைப் பற்றி நேரில் பார்த்தவுடன் அவனைப் பற்றிய தகவல்களை திரட்டுகிறார். அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார். ஏனெனில் ரகுராம் உளவியல் ரீதியாக பாதிப்படைந்து, மன நிலை சமன் தொடர்பான சிகிச்சையை பதினேழு ஆண்டுகளுக்கு பின்னரும் தொடர்ந்து பெற்று வருபவர் என்பது தெரிய வருகிறது. அதனைத் தொடர்ந்து இந்த காரணமாகவே இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள்.

இதனிடையே விராட் - சிராக் ஆகியோரின் துப்பாக்கி கலாசாரத்தை பரவ விடாமல் தடுக்க வேண்டும் என என். ஐ. ஏ. எனும் தேசிய புலனாய்வு முகமையின் தமிழக பிரிவின் உயரதிகாரியான பிரேம் நாத் ( பிஜு மேனன்) திட்டமிடுகிறார்.இதற்காக பல திட்டங்களை தேசிய புலனாய்வு முகமையினர் தீட்டுகிறார்கள்.

ஆனால் மாலதி தன்னை விட்டுட்டு போய்விட்டாள் என நம்பும் ரகுராம் - மாலதி இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாததால் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்.  இவரின் தொடர் தற்கொலை முயற்சியை பிரேம் நாத் - தனது திட்டத்திற்காக பாவித்து கொள்கிறார்.  அதில் பிரேம் நாத்திற்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? ரகுராம்- தன் காதலியான மாலதியுடன் இணைந்தாரா? இல்லையா? என்பதையும் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.

தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரத்தின் ஊடுருவலை தடுத்து நிறுத்தும் அபூர்வமான ஆற்றல் பெற்ற நாயகன்- இந்த எக்சன் கலந்த அதிரடியா என ஒன் லைனை இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் தனக்கே உரிய பாணியில் ஜம்மென்று திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார். ஆனால் திரைக்கதையில் ஹீரோயிசம் இருக்கிறது. பிரம்மாண்டம் இருக்கிறது.‌ ஆனால் இரண்டாம் பாதியில் தேவையில்லாமல் திரைக்கதை பக்கவாட்டிலும் பயணிப்பதால்.. காட்சிகள் திரும்ப திரும்ப பார்த்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

நாயகனுக்கும், வில்லனுக்கும் இடையிலான 'முகம் பாரா ' அணுகுமுறை.‌ காதலனுக்கும் , காதலிக்கும் 'காதலை விட மனித நேயம் முக்கியமா? இல்லையா? என்ற விவாதத்திற்குரிய அணுகுமுறை.. என இயக்குநர் முருகதாஸ் சுவராசியத்தை ஏற்படுத்தினாலும்... நாயகனுக்கு வித்தியாசமான உளவியல் நோய் என்று சித்தரித்து, அதனூடாக ஹீரோயிஸத்தையும், கொமடியையும் இணைத்திருப்பது புதிது என்பதால்... அதில் சிவகார்த்திகேயனின் நடிப்பும் உற்சாகமாக இருக்கிறது.

எக்சன் காட்சிகளில் அதிரடி காட்டி இருக்கும் சிவகார்த்திகேயன்.. உச்சகட்ட சண்டை காட்சியில் ரசிகர்களை தனது அதிரடியால் மிரட்டி இருக்கிறார்.

மாலதி எனும் பல் வைத்தியராக நடித்திருக்கும் நடிகை ருக்மணி வசந்த் - தன் காதலனின் உளவியல் சிக்கலை உணர்ந்து கொண்டு அவனை நேசிப்பது தனித்துவமான கவனத்தை ஈர்க்கிறது இதில் ருக்மணியின் பண்பட்ட நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்கிறது.

விராட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பொலிவுட் நடிகர் வித்யூத் ஜாம்வால் - சிராக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர் 'டான்சிங் ரோஸ்' சபீர் கல்லரக்கல்  என இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவும் , பின்னணி இசையும் , பாடல்களும் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.

இரண்டாம் பாதியில் எக்சன் காட்சிகளின் நீளம் அதிகம் என்பதால் அதனை படத்தொகுப்பாளர் சீர்தூக்கி ஆராய்ந்து வெட்டி இருக்கலாம்.

பல கேள்விகளுக்கு விடை இல்லை என்றாலும்.. பட மாளிகையில் படத்தை காணும் ரசிகர்களுக்கு படக்குழுவினர் குறைந்த வீரியம் கொண்ட மாயாஜாலத்தை நிகழ்த்தி பார்வையாளர்களை வசப்படுத்துகிறார்கள்.

மதராஸி - சுப்பர் ஹீரோ.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி...

2026-07-17 17:05:39
news-image

அருள்வான் - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:30:17
news-image

அன்பே டயானா - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:36:58
news-image

நடிகர் வைபவ் நடிக்கும் 'மாறு வேஷம்'...

2026-07-17 14:58:49
news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் பிரபாஸின் 'ஃபௌஜி'

2026-07-16 17:19:56
news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'வாணவேடிக்கை'...

2026-07-16 17:13:17
news-image

சுங்கத்துறை விசாரணையின் பின்னணியில் உருவாகும் நடிகர்...

2026-07-16 17:09:20
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் புதிய...

2026-07-16 17:06:29
news-image

நடிகர் ஆர். மாதவன் நடிக்கும் 'ஜி...

2026-07-16 17:02:50
news-image

விஜய் அண்டனி வெளியிட்ட பாலாஜி சக்திவேலின்...

2026-07-16 16:59:56
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51