தென்னிந்திய நட்சத்திர நடிகையான ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'தி கேம்: யூ நெவர் ப்ளே அலோன் 'எனும் இணையத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதியன்று நெட்ஃபிளிக்ஸ் எனும் முன்னணி டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.
'தூங்காவனம்', 'கடாரம் கொண்டான்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் உருவாகியுள்ள' தி கேம் : யூ நெவர் பிளே அலோன்' எனும் இணையத் தொடரில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ,சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் சாந்தினி, ஷியாமா ஹரிணி , பாலா ஹசன் , சுபாஷ் செல்வம், தீரஜ் , ஹேமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். திரில்லர் ஜேனரிலான அசல் தமிழ் இணையத் தொடராக உருவாகி இருக்கும் இந்த இணைய தொடரை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
நெட்ஃபிளிக்ஸ் எனும் முன்னணி டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதியன்று இந்த இணைய தொடர் வெளியாகிறது.
இணைய தொடர் குறித்து இயக்குநர் பேசுகையில், '' உண்மைக்கும் , ஏமாற்றுதலுக்கும் இடையேயான பலவீனமான கோடு பற்றிய கதையாகவும் இந்த இணைய தொடர் உருவாக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் உறவுகளில் மாற்றத்தை உண்டாக்கி வரும் தற்போதைய டிஜிட்டல் உலகின் இருண்ட பக்கங்களையும் இந்த இணையத் தொடர் பேசுகிறது'' என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM