இன்றைய திகதியிலும் எம்முடைய வீடுகளில் இருக்கும் இளம் பெண்கள்- உயர்கல்வி கற்று தனியார் நிறுவனத்திலோ அல்லது அரசாங்கத்திலோ பணியாற்றும் பெண்கள்- எதிர்கால வாழ்க்கைக்காக அதாவது திருமண வாழ்க்கைக்காக பெற்றோர்களின் வழிகாட்டலை எதிர்பார்க்கிறார்கள்.
சிலர் ஆண் நண்பர்களை வைத்திருந்தாலும்... காதலித்தாலும்... திருமணம் என்று வரும்போது பெற்றோர்களின் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும், அணுகுமுறைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
இவர்கள் திருமணம் குறித்து குறிப்பாக திருமண வரன் குறித்து ஒரு அபிப்பிராயத்திலும்... இவர்களுடைய பெற்றோர்கள் மாற்று அபிப்பிராயத்திலும் இருந்தால்... அங்கு திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தையில் சுணக்கமும், தடையும் ஏற்படும்.
இதுபோன்ற தருணங்களில் பிள்ளையைப் பெற்ற பெற்றோர்கள் சூட்சமமான முறையில் பிரத்யேகமாக இறைவனை வழிபட்டால்.. தடை அகன்று திருமணம் சுபமாக நிகழும் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அதாவது ஏலக்காயை - முனை உடையாத ஏலக்காயை - வாங்கி, அதனை மாலையாக கோர்க்க வேண்டும். இந்த ஏலக்காய் மாலையை உங்களுடைய குலதெய்வ ஆலயத்திற்கு சென்று குலதெய்வத்திற்கு சாற்றி, திருமணம் நிகழ வேண்டும்.
'இது தொடர்பாக ஏதேனும் எம்முடைய முன்னோர்களின் பாவங்கள் தடையாக இருந்தால் அவை நீங்க வேண்டும்' என்று பிரார்த்திக்க வேண்டும். அதே தருணத்தில் ஏலக்காய் மாலையை மட்டுமல்லாமல் நீங்கள் உங்கள் குலதெய்வத்திற்கு செய்யும் வழக்கமான பூஜை புனஸ்காரங்களையும்.. பொங்கல் படையல்களையும்.. மேற்கொள்ள வேண்டும்.
இது போன்றதொரு பிரார்த்தனையை நீங்கள் சுபயோக சுப தினத்தில் மேற்கொண்டால் ... திருமணம் தொடர்பான தடைகள் அனைத்தும் நீங்கி, உங்கள் மனதைக் கவர்ந்த வரன் அமைந்து திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM