தயாரிப்பு : ஆதிமூலம் கிரியேஷன்ஸ்
நடிகர்கள் : கே பி வை பாலா, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, அமுதவாணன், ஆராத்யா, 'கல்லூரி' வினோத் மற்றும் பலர்.
இயக்கம் : ஷெரீப்
மதிப்பீடு : 2 / 5
'கலக்க போவது யாரு' என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமாகி, தன்னுடைய தயாள குணத்தால் பிரபலமானவர் கே பி வை பாலா. இவர் கதையின் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் என்பதால் ரசிகர்களிடத்தில் காந்தி கண்ணாடி திரைப்படத்திற்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை படக்குழுவினர் பூர்த்தி செய்தார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு வழங்கும் ஊழியராக பணியாற்றுகிறார் காந்தி ( பாலாஜி சக்திவேல்) இவருடைய மனைவி கண்ணம்மா( அர்ச்சனா) . இவர்கள் இளமையில் காதலித்து, பெற்றோருக்கு எதிராக திருமணம் செய்து கொள்வதற்காக ஊரிலிருந்து வெளியேறி சென்னையில் வாழ்ந்து வருபவர்கள்.
இவர்களுக்கு வாரிசு இல்லை. வயதான காலத்தில் தன் மனைவியான கண்ணம்மாவை அளவு கடந்து நேசிக்கிறார் காந்தி. இந்நிலையில் ஒருவரது திருமண வைபவத்தில் பங்கு பற்றும் கண்ணம்மா காந்தியிடம், 'எமக்கும் பிள்ளைகள் இருந்தால் இதுபோல் அனைவரும் வியக்கும் அளவிற்கு அறுபதாம் திருமணத்தை நடத்தி வைப்பார்கள் தானே..!' என இயல்பாய் கேட்கிறார். இது காந்திக்கு பெரிய சவாலாக தெரிகிறது.
இதுநாள் வரை தன் மனைவி ஆசைப்பட்டு எதுவும் கேட்டது கிடையாது. அதனால் இந்த அறுபதாம் கல்யாணத்தை அவரது விருப்பம் போல் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிடுகிறார். இதற்காக திருமணம் உள்ளிட்ட அனைத்து வைபவங்களையும் சிறப்பாக நடத்தித் தரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான கதிர் ( கே பி வை பாலா) மற்றும் அவரது குழுவினரை சந்திக்கிறார்.
அந்தத் தருணத்தில் கதிர், காந்தியிடம் உங்களுடைய 60-வது கல்யாணம் உங்களது மனைவியின் விருப்பப்படி நடத்த வேண்டும் என்றால் இந்திய மதிப்பில் 60 லட்சம் ரூபாய் செலவாகும் என சொல்கிறார். பிறகு தன் மனைவியின் ஆசையை பூர்த்தி செய்வதற்காக தன்னுடைய பூர்வீக நிலத்தை விற்கிறார்.
அதில் கிடைக்கும் தொகையை பெற்ற தருணத்தில் இந்திய அரசால் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. இதனால் தன் மனைவியின் விருப்பப்படி அறுபதாம் கல்யாணத்தை நடத்த இயலுமா? இயலாதா? என்ற சூழல் உருவாகிறது. சுயநலத்துடன் செயல்படும் கதிர் இந்த காந்தி - கண்ணம்மா ஆகியோரின் அறுபதாம் கல்யாணத்தை நடத்தி வைத்தாரா,? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.
முதிய வயதில் உள்ளவர்களின் காதலை அதன் இயல்புடன் விவரித்து இருந்தாலும்.. பார்வையாளர்கள் எளிதாக யூகிக்கும் வகையில் திரைக்கதை பயணிப்பதால் எப்போது முதல் பாதி நிறைவடையும்? என்ற ஏக்கம் மனதில் எழுகிறது.
இரண்டாம் பாதியில் ஏதேனும் புதிய திருப்பங்கள் இருக்கும். அது சுவாரசியமாக இருக்கலாம் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் படைப்பை தொடர்ந்து காணும் போது சில இடங்களில் மட்டுமே நாம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறார் இயக்குநர் குறிப்பாக உச்சகட்ட காட்சி ரசிகர்களை கவனிக்க வைக்கிறது. மற்ற இடங்களில் வழக்கம் போல் சோர்வு தான் எட்டிப் பார்க்கிறது.
கதையின் நாயகனாக அறிமுகமாகும் கே பி ஒய் பாலா கதையின் நாயகனாக அல்லாமல் ஒரு சாதாரண சுயநலமிக்க இளைஞராக தோன்றி, அதன் பிறகு அழுத்தமான உளவியல் பாதிப்பு ஏற்பட்ட உடன் தன்னை திருத்திக் கொள்ளும் வேடத்தில் நடித்திருக்கிறார். இது அவருடைய ரசிகர்கள் எதிர்பாராதது. அத்துடன் இதுபோன்ற கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கிறது. ஆனால் நடனத்தில் தன்னால் சிறப்பாக சோபிக்க முடியும் என்பதை நிரூபிக்கிறார். இவருக்காக வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் சண்டை காட்சி ஒரு பிரிவு ரசிகர்களை மட்டுமே கவர்கிறது.
கீதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி, அவரது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆனால் அவர் உச்சகட்ட காட்சியில் காதலனை பற்றி குறை சொல்வதும், அதற்கு காதலன் விளக்கம் தருவதும் மேலோட்டமாக இருக்கிறது.
காந்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல் வழக்கம் போல் தன்னுடைய வித்தியாசமான உடல் மொழியாலும் அந்த வயதிற்கே உரிய காதல் மொழி உச்சரிப்பாலும் ரசிகர்களை வெகுவாக கவர்கிறார்.
கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மூத்த நடிகை அர்ச்சனா தன் அனுபவ நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்.
பாலாஜி கே. ராஜாவின் ஒளிப்பதிவும், விவேக் - மெர்வினின் பின்னணி இசையும் ரசிகர்களுக்கு ஆறுதலை அளிக்கிறது. யுவன் சங்கர் ராஜா குரலில் ஒலிக்கும் பாடல்.. ரசிகர்களை வசீகரிக்கிறது.
முதுமையான வயதில் உள்ளவர்களின் காதலை உணர்வு பூர்வமாக இயக்குநர் விவரித்திருந்தாலும் மனதில் எந்த தாக்கமும் ஏற்படுத்தவில்லை.
காந்தி கண்ணாடி - கறுப்பு கண்ணாடி






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM