போதைப்பொருட்களுடன் 3,027 பேர் கைது!

05 Sep, 2025 | 05:26 PM
image

நாடளாவிய ரீதியில் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 3,027 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் 1011 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 972 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன்  28 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 913 பேரும், கஞ்சா செடிகளுடன் 29 பேரும், போதை மாத்திரைகளுடன் 59 பேரும், சட்டவிரோத சிகரட்டுகளுடன் 15 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 01 கிலோ 907 கிராம் 606 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 01 கிலோ 856 கிராம் 529 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 01 கிலோ 342 கிராம் 62 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருளும், 1059 கிலோ 899 கிராம் 634 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 48925 கஞ்சா செடிகளும், 6733 போதை மாத்திரைகளும், 4053 சிகரட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார்...

2026-08-18 16:37:09
news-image

கண்டி - பதீயத்தலாவ வீதியில் விபத்து...

2026-08-18 16:33:40
news-image

மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்..!

2026-08-18 16:19:02
news-image

கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை ஜோன் ஹேர்பட்...

2026-08-18 15:46:42
news-image

உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் பேராதனை...

2026-08-18 14:42:57
news-image

பிரித்தானிய Global Marine Systems நிறுவனத்துக்காக...

2026-08-18 14:55:41
news-image

இலங்கை - லிதுவேனியா இடையிலான 30...

2026-08-18 14:34:59
news-image

யாழில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை...

2026-08-18 14:54:30
news-image

கொழும்பு பேராயருடனான இலவச செயற்பாட்டு மையத்தின்...

2026-08-18 14:48:29
news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரர்...

2026-08-18 13:42:24
news-image

எல் - நினோ காலநிலை தாக்கம்...

2026-08-18 13:36:40
news-image

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய மீண்டும்...

2026-08-18 13:08:11