சந்நிதியான் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தில் பகல் கொள்ளை!

05 Sep, 2025 | 05:32 PM
image

தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இடம்பெற்று வருவதோடு இன்று மாலை சப்பறத் திருவிழாவும், நாளை காலை தேர்த்திருவிழாவும், நாளை மறுதினம் காலை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும் நிலையில்   தொண்டமனாறு தண்ணீர் தாங்கி அருகே உள்ள மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தில் தலைக்கவசம் (ஹெல்மெட்) ஒன்றை பாதுகாப்பதற்கு 50 ரூபாய் அறவிடப்படுவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டணம் அதிகம் தொடர்பில் பொதுமக்கள் மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு நிலைய ஊழியரிடம் வினவிய போது அவர் வல்வெட்டித்துறை நகரசபையினர் தான் 50 ரூபாய் அறவிட சொன்னதாக குறிப்பிட்டு பொதுமக்களிடம் முரண்பட்டிருந்தார்.

இது தொடர்பில் வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, 

அவர் குறித்த பாதுகாப்பு நிலையம் தொடர்பில் ஏற்கனவே ஐந்தாறு முறைப்பாடுகள் கிடைத்து தங்களது வருமான வரி உத்தியோகத்தர் தலையிட்டு ரிக்கெட்டுக்களை பறிமுதல் செய்து எச்சரித்ததாகவும் குறிப்பிட்டார். 

வாகனப் பாதுகாப்பு நிலையத்துக்கு நகரசபை சார்பில் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு 40 ரூபாயும், ஒரு ஹெல்மெட்டுக்கு 20 ரூபாய் அறவிடுமாறு உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டார். 

இப்போது கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்ட அவர் குறிக்கப்பட்ட தொகையை தாண்டி பொதுமக்களிடம் கட்டணங்கள் அறவிட்டால் ஆலயத்தின் முன்னுள்ள வல்வெட்டித்துறை நகரசபையின் உற்சவகால பணிமனையில் முறையிடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், இவ்வாறு மோசடி இடம்பெற்றது குறித்து கேள்வி கேட்ட ஊடகவியலாளரை குறித்த பாதுகாப்பு நிலைத்தில் கடமையில் இருந்தவர் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் ஏற்றுமதியில் 5 பில்லியன் டொலர்...

2026-07-17 05:02:55
news-image

இளம்வயதுக் கர்ப்பங்கள் மற்றும் எச்ஐவி பரவலைத்...

2026-07-17 05:00:34
news-image

2050-க்குள் ஆசியா பொருளாதார மையமாகும்; இலங்கை...

2026-07-16 16:59:30
news-image

சிறைச்சாலைத் திணைக்களத்தில் புதிய ஆட்சேர்ப்பு, சேவை...

2026-07-16 13:15:11
news-image

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க...

2026-07-16 16:07:33
news-image

சுமந்திரனின் முன்மொழிவை தொல்பொருள் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டமை...

2026-07-16 16:08:27
news-image

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு...

2026-07-16 16:14:53
news-image

எமது காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை...

2026-07-16 21:56:39
news-image

கனகராயன்குளத்தில் 14 வயது மகளை பாலியல்...

2026-07-16 21:52:12
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் : கைதிகளின்...

2026-07-16 19:10:42
news-image

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை தமிழக...

2026-07-16 21:33:34
news-image

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு...

2026-07-16 19:10:22