இலங்கை தேசத்தில் நலவுகளை மேலோங்கச் செய்ய நபிகளாரின் போதனைகளை கடைப்பிடித்தொழுகுவோம்! - எஸ்.எம்.மரிக்கார் 

05 Sep, 2025 | 11:09 AM
image

உலகிற்கு ஓர் அருட்கொடையாக அனுப்பப்பட்ட செயல்களில் மிகச் சிறந்த செயலை ஆற்றுவதற்கு (அப்லலுல் ஹைர்) வழிகாட்டிய காலங்களால் மாறாத உன்னத போதனைகளை மானிடத்திற்கு ஒப்புவித்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினம் இன்று நினைவுகூரப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

அதில் அவர் மேலும் தெரிவிப்பதாவது,

கருணை மிகுந்த நபி பெருமானாரின் சீரிய போதனைகளும் சிறந்த அறிவுரைகளும் செழுமையான வழிகாட்டுதல்களும் ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் அன்றாடம் கடைப்பிடிக்கவேண்டிய வாழ்வியல் மட்டுமின்றி அவை என்றும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவையாகும். இறையச்சத்தின் மூலமே மனிதகுலத்தை நல்வழிப்படுத்த இயலும் என்பது அன்னாரின் நம்பிக்கையாகும்.

இஸ்லாத்தின் தூதைப் போலவே அவரது போதனைகளும் உலக வாழ் மக்கள் அனைவரையும் சார்ந்ததாக அமைந்துள்ளதுள்ளதோடு அன்னாரது போதனைகளும் காலத்தால் என்றும் முன்மாதிரிமிக்கதுமாகும். இறைவனுக்கு மட்டுமே அஞ்சுதல் வேண்டும் என போதித்த நபிகள் நாயகம் வேறு எதற்காகவும் அஞ்சிட தேவையில்லை என்றும்; குறிப்பாக, மனிதனுக்கு மனிதன் அஞ்சவே கூடாதென்றும் போதனைகள் வழங்கினார். வாய்மை தூய்மை அஞ்சாமையை எடுத்துரைத்தார். 

உதாரணப் புருஷர்களாக சமூகவியல் ஒழுங்கிலும் மாபெரும் புரட்சியை அவர் அன்றைய காலத்தில் தோற்றுவித்தார்கள். சமூகவியல் பிரச்சினைகளுக்கு இன்று வட துருவ நாடுகள்,தென் துருவ நாடுகள் என்று உலகமே நீடித்த தீர்வுகளை தேடிக்கொண்டிருக்கிறது. நிலைபேறான போதனைகள் நபிகள் நாயகத்தின் வாழ்வியலை வாசிக்கும் போது நுகர்ந்து கொள்ளலாம். தனிமனிதர்களாகவும், குடும்பமாகவும், சமூகமாகவும் அன்னாரது போதனைகளை வாழ்வியலாக்க இந்நாளில் உறிதியேற்போம்.

நலவுகளின் பக்கம் விரையுமாறு போதித்த அன்னார் வெறுமனே ஆன்மீகத்துடன் மாத்திரம் வரையறுக்காது சமூகவியல் பரப்பில் பரந்த செலயாற்றுகைக்கான (Activism)  ஊந்துதலையும் வழங்கினார்.

நபிகள் நாயகம் காட்டித் தந்த பொருட்பொலிவு மிகுந்த போதனைகளின் பிரகாரம் இலங்கை தேசத்தில் நலவுகளை மேலோங்கச் செய்ய இந்நாளில் அதிஷ்டானம் கொள்வோம்.

அன்னாரையும், அன்னாரது உன்னத போதனைகளையும் நினைவு கூர்ந்து இலங்கை முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து உலக வாழ் இஸ்லாமிய சமூகத்தினருக்கும் எனது  "மிலாதுன் நபி" தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களைப்...

2025-12-13 15:00:57
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-12-13 14:36:56
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பில் 590...

2025-12-13 14:39:38
news-image

15 வயது மாணவி மீது பாலியல்...

2025-12-13 12:29:31
news-image

அலவத்துகொடை - அங்கும்புர பிரதான வீதியில்...

2025-12-13 14:45:21
news-image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் வைத்தியசாலையை சுகாதார...

2025-12-13 14:54:39
news-image

சம்மாந்துறையில் மான் இறைச்சி, துப்பாக்கி மற்றும்...

2025-12-13 12:06:52
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Asriel...

2025-12-13 12:03:47
news-image

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு...

2025-12-13 11:47:30
news-image

புத்தளத்தில் காணி ஒன்றில் இருந்து ஆயுதங்கள்...

2025-12-13 11:46:37
news-image

நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம்...

2025-12-13 12:06:24
news-image

மொரட்டுமுல்லையில் மர ஆலை ஒன்றில் தீ...

2025-12-13 11:38:35