அர்ப்பணிப்புள்ள சமுதாயத்தை கட்டியெழுப்ப நபிகளார் காட்டிய வழிமுறைகளை நாமும் பின்பற்றுவோம் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 

05 Sep, 2025 | 10:40 AM
image

சிந்தனையுள்ள, கருணையுள்ள, நீதி மற்றும் நியாயத்தை உலகிற்குக் கற்பித்த மனிதாபிமான உணர்வுகளையும் மனித அன்பையும் உலக உயிரினங்களுக்காகப் பகிர்ந்தளித்த இறைதூதர் முஹம்மது நபி (ஸல்)அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. அதற்காக முழு உலக மக்களுக்கும் அதேபோல் இலங்கையில் வாழும் இஸ்லாமிய சகோதரத்துவத்திற்கும் வாழ்த்துச் செய்தியை அனுப்ப முடிந்தமை மகிழ்ச்சிக்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மீளாதுன் நபி தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இனம், மதம், குலம் அல்லது இருப்பு நிலை பார்க்காமல் ஒருவருக்கொருவர் மரியாதை, கருணை மற்றும் சேவையின் அடிப்படையில் கட்டமைக்கப்படும்போது மட்டுமே ஒரு சமுதாயம் செழிக்க முடியும் என்பதை நபிகள் நாயகம் நமக்குக் காட்டியுள்ளார். அன்னாரின் போதனையானது ஒற்றுமை, பணிவு மற்றும் கருணையை பிரதிபலிக்கிறது, அது இன்றும் நமது பாதையை ஒளிரச் செய்கிறது என்பது என் நம்பிக்கை.

ஒரு நாடாக நாம் இப்போது பல சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். எதிர்காலத்தில் மேலும் சவால்கள் வரக்கூடும். ஆனால் ஒரே மக்களாக, ஒரே குடும்பமாக மற்றும் ஒரே நாடாக ஒன்றிணைவதன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இன மத குல வேறுபாடுகளைப் பார்க்காமல் ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புள்ள சமுதாயத்தை கட்டியெழுப்ப அன்னார் காட்டிய வழிமுறைகளை நாமும் பின்பற்ற முடியும். அந்த வழிமுறைகளைப் பின்பற்றி இந்தக் கடினமான நேரத்தில் நாம் அனைவரும் நாட்டிற்காக ஒன்றாக அணிதிரள வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-08 06:16:04
news-image

ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை: சிறைச்சாலை...

2026-08-08 06:14:24
news-image

துஷ்பிரயோக நோக்கங்களைக் கொண்ட நபர்கள், கைதிகளை...

2026-08-08 06:11:13
news-image

ரவி செனவிரத்னவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்குத்...

2026-08-08 05:45:32
news-image

மன்னார் பேசாலையில் பற்றைக்காட்டில் ஆண் ஒருவரின்...

2026-08-08 05:42:37
news-image

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளுக்கு...

2026-08-07 12:20:20
news-image

சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர பிரதிப்...

2026-08-07 23:54:30
news-image

சிறைச்சாலை வன்முறைகள் அரசாங்கத்தின் திட்டமிட்ட சதியா?...

2026-08-07 16:08:47
news-image

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் எனக்கு எதிராக...

2026-08-07 14:52:22
news-image

சத்துருக்கொண்டான் படுகொலை முறைப்பாட்டாளரை சிஐடி அழைப்பது...

2026-08-07 15:14:41
news-image

சிறைச்சாலை கட்டமைப்பை பலவீனப்படுத்த சதி: அமைச்சர்...

2026-08-07 16:07:58
news-image

விலை அதிகரிப்புக்கு மத்தியில் அரசின் சமூக...

2026-08-07 15:06:00