ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் : உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Published By: Digital Desk 1

05 Sep, 2025 | 11:59 AM
image

ஆப்கானிஸ்தானின் தொலைதூர தென்கிழக்கு பகுதியில் வியாழக்கிழமை(நேற்று) இரவு 5.6 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆறு நாட்களில் மூன்றாவது நிலநடுக்கமாக இது ஏற்பட்டுள்ளது.

முதல் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

குறித்த நிலநடுக்கம் அந்த நாட்டு நேரப்படி 20.56 அளவில் பதிவாகியுள்ளது.

இதனால் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள மக்கள் அச்சத்தில் இருப்பதுடன், அந்த பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை.

இருப்பினும், காயமடைந்த சுமார் 17 பேர் குனார் மாகாண வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதேநேரம், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,205 பேர் உயிரிழந்ததுடன், 3,640 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது...

2026-07-22 16:20:06
news-image

டெல்லியில் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”யினரால்...

2026-07-22 16:33:45
news-image

டெல்லி போராட்டம் : கைது செய்யப்பட்ட...

2026-07-22 11:57:27
news-image

அசாமில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ; கடந்த...

2026-07-22 11:13:45
news-image

Godzilla vs. Kong திரைப்படப் புகழ்...

2026-07-22 11:02:41
news-image

புதுடெல்லியில் பரபரப்பு: பிரதமர் மோடி இல்லம்...

2026-07-22 09:39:58
news-image

இந்தியாவில் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து:...

2026-07-21 17:00:50
news-image

15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களை...

2026-07-21 15:50:13
news-image

கயானா படகு விபத்து; 27 பேரின்...

2026-07-21 11:41:07
news-image

கிழக்கு ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளப்பெருக்கு; 20...

2026-07-21 10:34:42
news-image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் -...

2026-07-21 10:32:37
news-image

வியட்நாமில் நடுவீதியில் தீப்பற்றி எரிந்த பஸ்...

2026-07-21 10:17:03