நூறு கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த கல்யாணி பிரியதர்ஷனின் 'லோகா- அத்தியாயம் 1 சந்திரா'

04 Sep, 2025 | 06:09 PM
image

தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமான மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முதல் முதலாக சுப்பர் ஹீரோவாக திரையில் தோன்றிய 'லோகா : அத்தியாயம் 1 சந்திரா' எனும் திரைப்படம் வெளியான ஏழு நாட்களில் இந்திய மதிப்பில் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது.

இதன் மூலம் மலையாள சினிமாவில் இருந்து பான் இந்திய திரைப்படமாக வெளியாகி நூறு கோடி ரூபாய் வசூல் கிளப்பில் லோகா அத்தியாயம் 1 சந்திரா' படமும் இணைந்திருக்கிறது.

இயக்குநர் டொமினிக் அருண் இயக்கத்தில் உருவாகி கடந்த ஒகஸ்ட் மாதம் 28ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ் , தெலுங்கு, மலையாளம்,  கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ' லோகா : அத்தியாயம் 1 சந்திரா' எனும் திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பிரியதர்ஷன் நஸ்லன், சந்து சனில்குமார்,  அருண் குரியன், சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்திலும், துல்கர் சல்மான் - டொவினோ தோமஸ் ஆகியோர் சிறப்பு தோற்றத்திலும் நடித்த இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியானாலும் ரசிகர்கள் தொடர்ந்து பேராதரவு வழங்கி வருகிறார்கள். இதன் காரணமாக இந்த திரைப்படம் வெளியான ஏழு  நாட்களில் இந்திய மதிப்பில் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறது. இதனால் முதன் முதலாக சுப்பர் ஹீரோவாக நடித்த கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right