இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் - சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதை வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆகிய இருவரும் எதிரும் புதிருமாக நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளாக மோதும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் மிஷ்கின், கீர்த்தி சுரேஷ், 'ஹார்ட் பீட்' சாருகேஷ், பால சரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா, ஏ. வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைக்கிறார். நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளின் வாதத்தை முன்னிலைப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் வெடிக்காரன் பட்டி எஸ். சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் தொடக்க விழாவில் பட குழுவினர் பங்கு பற்றினர். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூரில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM