உண்மை சம்பவத்தைத் தழுவி தயாராகும் 'தடை அதை உடை'

04 Sep, 2025 | 05:53 PM
image

'அங்காடி தெரு' மகேஷ் கதையின் நாயகர்களுள் ஒருவராக நடித்திருக்கும் 'தடை அதை உடை' எனும் திரைப்படம் - 1990களில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி தயாராகி இருப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் அறிவழகன் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தடை அதை உடை' எனும் திரைப்படத்தில் மகேஷ், குணா பாபு, கே.எம். பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மகாதீர் முகமது, நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், கௌதமி, சுபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தங்கபாண்டியன் மற்றும் சோட்டா மணிகண்டன் ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் சுந்தர் இசையமைத்துள்ளார். உண்மை சம்பவத்தை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை காந்திமதி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் அறிவழகன் முருகேசன் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' 1990களில் தமிழகத்தின் டெல்டா பகுதி என குறிப்பிடப்படும் பட்டுக்கோட்டை தாலுகாவில் கொத்தடிமையாக இருந்த ஒருவர் தனியாக போராடி தன் பிள்ளைகளுக்கு கல்வி பெறுவதற்கான உரிமையை பெற்றார். இந்த உண்மை சம்பவத்தையும், சமூக வலைதளங்களின் தாக்கம் குறித்தும் இந்த திரைப்படத்தின் கதை விவரிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் தஞ்சை மாவட்டத்தின் மண் சார்ந்த கலாச்சாரமும் திரைக்கதையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.

இந்தத் திரைப்படத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சூர்யா - ஜோதிகாவின் 20 ஆண்டுகால...

2026-09-16 15:31:09
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-09-16 14:01:19
news-image

விமல் நடிக்கும் 'சண்டக்காரி' படத்தின் முன்னோட்டம்...

2026-09-16 13:47:29
news-image

எம். எஸ். பாஸ்கர் நடிக்கும் 'ஃபீல்...

2026-09-16 13:50:23
news-image

நடிகர் விமல் - ஸ்ரேயா சரண்...

2026-09-15 15:08:53
news-image

நடிகை அஞ்சலி நாயரின் நடனத்தில் வெளியான...

2026-09-15 15:08:29
news-image

நடிகர் 'சியான்' விக்ரம் நடிக்கும் :'பவர்...

2026-09-15 14:59:36
news-image

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் 'தி கிராண்ட்...

2026-09-15 14:58:32
news-image

நடிகை கோமலீ பிரசாத் நடிக்கும் 'மண்ட...

2026-09-15 14:46:21
news-image

ராஷ்மிகா மந்தானா நடிப்பில் திரைப்படமாகும் 'பாரத...

2026-09-15 14:46:05
news-image

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தனி முத்திரை...

2026-09-15 14:43:55
news-image

கடலோர பாதுகாப்புப் பகுதிகளில் உள்ள சட்டவிரோத...

2026-09-14 16:24:05