பாதாள உலகக் குழுவினர் கைது செய்யப்பட்டதால் நாமல் ஏன் கலவரமடைகின்றார்? அமைச்சரவை பேச்சாளர் சாடல்

04 Sep, 2025 | 05:50 PM
image

(எம்.மனோசித்ரா)

இந்தோனேஷியாவிலிருந்து பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டமையை சாதாரண விடயல்ல. இந்த விடயம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ ஏன் கலவரமடைகின்றார் என்பது எமக்கு தெரியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (04) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்தோனேஷியாவிலிருந்து பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டமையை சாதாரணமாகக் கருத வேண்டாம். எமது குற்றப்புலனாய்வுப் பிரிவினர், இரு நாட்டு பொலிஸார், சர்வதேச பொலிஸ், இந்திய புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட பல தரப்பினரின் அர்ப்பணிப்பான சேவைக்கமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஐவரையும் நாட்டுக்கு அழைத்து வருவதென்பது சாதாரண விடயமல்ல. இதனை விட பாரிய குற்றங்கள் தொடர்பில் அறிந்திருப்பதால் நாமல் ராஜபக்ஷவுக்கு இது சாதாரண விடயமாக இருக்கலாம். எனவே இது அவர்களுக்கு சிறிய விடயமாக இருந்தாலும் நாட்டுக்கு பெரிய விடயமாகும். அடுத்த கட்ட விசாரணைகளில் வெளியாகவிருக்கும் தகவல்களில் இதனுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் உட்பட பலரது தகவல்களும் வெளியாகும்.

படிப்படியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அதற்கமைய சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குற்றப்புலனாய்வு திணைக்களமும், பொலிஸாரும் மேலதிக தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குவர்.

மக்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை சிறிதாக எண்ண வேண்டாம் என்றும், சற்று முற்போக்காக சிந்திக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். அண்மையில் ஊடக அடையாள அட்டையைப் பயன்படுத்தி கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே சிலரது தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். இந்த விடயத்தில் நாமல் எதற்காக இந்தளவுக்கு களவரமடைந்தார் என்பது எமக்கு தெரியும். குற்றங்களுடன் தொடர்பற்ற எவரும் வீணாகக் கலவரமடையத் தேவையில்லை. மாறாக வேறு தகவல்கள் தெரிந்திருந்தால் அவற்றை பொலிஸாருக்கு வழங்குவது சிறந்ததாகும். இங்கு எந்தவொரு பிரசாரமும் முன்னெடுக்கப்படவில்லை. பொலிஸாரை கௌரவிப்பதற்காவே பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விமான நிலையத்துக்குச் சென்றிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய...

2026-02-17 17:19:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

2026-02-17 20:12:55
news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57
news-image

நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை...

2026-02-17 19:54:35