செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாது ; விசாரணைக்கு தேவையான வசதிகளை வழங்கும் - அமைச்சரவை பேச்சாளர்

04 Sep, 2025 | 05:33 PM
image

(எம்.மனோசித்ரா)

செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாது. ஆனால் பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும். நீதிமன்றத்துடன் தொடர்புடைய விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு தேவையற்றதாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. குறித்த அறிக்கையில் செம்மணிக்கு சுயாதீன விசாரணை பொறிமுறையை நிறுவுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்தோடு சர்வதேச நிபுணத்துவத்தின் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (04) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்

செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. எனவே அதனுடன் தொடர்புடைய விடயங்கள் நீதிமன்றத்துக்கே அறிவிக்கப்படும். நீதிமன்றம் சுயாதீனமான நிறுவனமாகும் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான வசதிகள் அரசாங்கத்தால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக விசேட குழுவொன்றினால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மறுபுறம் பொலிஸ் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. திமன்றத்துக்கு அறிவிக்குமாறு அதற்கான தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு நாம் இடமளித்திருக்கின்றோம். அதற்கமைய அந்த விவகாரத்தில் நியாயமான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக நம்புகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20