நீடித்த மயக்கத்தைத் தராத அற்ககோல் பானத்தைக் கண்டுபிடித்துள்ளதாக வட கொரிய விஞ்ஞானிகள் உரிமை கோரியுள்ளனர்.

இன்பகரமாக உணர்வைத் தரும் இந்த மதுபானம் மறுநாள் விழித்து எழும் போது வழமையான மதுபானங்களை அருந்துவதால் ஏற்படக்கூடிய மயக்கம் , வேதனை போன்ற உணர்வுகள் அறவே ஏற்படுத்தாது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த மதுபானத்தில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அற்ககோல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மதுபானத்தின் கண்டுபிடிப்பானது வட கொரியாவின் உள்நாட்டு சாதனைகளில் ஒன்றாக வட கொரிய ஊடகமான பையொங்யாங் டைம்ஸால் குறிப்பிடப்பட்டுள்ளது.

சேதன முறைப்படி பயிர் செய்யப்பட்ட அரிசி வனை மற்றும் ஜின்ஸெங் மூலிகை என்பவற்றைப் பயன்படத்தி இந்த மதுபானம் தயாரிக்கப்பட்டுள்ளதாக வட கொரிய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.