தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் துசித ஹல்லொலுவவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

04 Sep, 2025 | 02:17 PM
image

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் துசித ஹல்லொலுவவை செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (04) உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  துசித ஹல்லொலுவ இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான 478,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய மடிக்கணனி, கையடக்க தொலைபேசி போன்ற பொருட்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த குற்றச்சாட்டின் பேரில், கடந்த மே மாதம் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்ட துசித ஹல்லோலுவ, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

எனினும், கடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதி அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகள் விதிக்கப்பட்டதுடன், வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டது.

இதற்கிடையில், அண்மையில் அவர் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவமும் பதிவாகியிருந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, கொழும்பு குற்றப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பின்னர், தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் துசித ஹல்லொலுவவை கைதுசெய்யுமாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து ஆகஸ்ட் 19 ஆம் திகதி காலை கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-08 06:16:04
news-image

ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை: சிறைச்சாலை...

2026-08-08 06:14:24
news-image

துஷ்பிரயோக நோக்கங்களைக் கொண்ட நபர்கள், கைதிகளை...

2026-08-08 06:11:13
news-image

ரவி செனவிரத்னவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்குத்...

2026-08-08 05:45:32
news-image

மன்னார் பேசாலையில் பற்றைக்காட்டில் ஆண் ஒருவரின்...

2026-08-08 05:42:37
news-image

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளுக்கு...

2026-08-07 12:20:20
news-image

சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர பிரதிப்...

2026-08-07 23:54:30
news-image

சிறைச்சாலை வன்முறைகள் அரசாங்கத்தின் திட்டமிட்ட சதியா?...

2026-08-07 16:08:47
news-image

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் எனக்கு எதிராக...

2026-08-07 14:52:22
news-image

சத்துருக்கொண்டான் படுகொலை முறைப்பாட்டாளரை சிஐடி அழைப்பது...

2026-08-07 15:14:41
news-image

சிறைச்சாலை கட்டமைப்பை பலவீனப்படுத்த சதி: அமைச்சர்...

2026-08-07 16:07:58
news-image

விலை அதிகரிப்புக்கு மத்தியில் அரசின் சமூக...

2026-08-07 15:06:00