ஹட்டன் ஆடைத்தொழிற்சாலையில்  வேலை செய்பவர்களை  ஏற்றிச்சென்ற பஸ்  - லொறி மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

ஹட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியில் பட்டல்கல சந்திக்கருகிலே காலை 7.45 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது. 

ஹட்டனிலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றுக்கு போடைஸ் பகுதியிலிருந்து வேலை செய்பவர்களை  ஏற்றிவந்த  பஸ் எதிரே வந்த லொறி ஒன்றுடன்  மோதுண்டே விபத்து ஏற்பட்டுள்ளது. பதையில் காணப்பட்ட வழுக்கல் நிலையினால் தடை இயங்காமல் லொறியில் மோதுண்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.  

பஸ்ஸில் பயணித்த போடைஸ் பகுதியை சேர்ந்த இரண்டு பெண்கள்  காயமுற்று டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்தாகவும் பஸ் மற்றும் லொறி சேதமாகியுள்ளதாகவும்  தெரிவித்தனர் .

குறித்த சம்பவம் தொடர்பாக  மேலதிக விசாரணையை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.