இரண்டு குறைநிரப்பு மதிப்பீடுகள் மற்றும் தீர்மானமொன்றுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

04 Sep, 2025 | 11:39 AM
image

இரண்டு குறைநிரப்பு மதிப்பீடுகள் மற்றும் தீர்மானம் ஒன்றுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் அண்மையில் (02) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. 

இதற்கமைய கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொதியை வழங்குவதற்காக, புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களைச் சலுகை விலையில் வழங்குவதற்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துவது குறித்து மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் குறைநிரப்பு மதிப்பீட்டை குழு கவனத்தில் எடுத்துக் கொண்டது.

அத்துடன், கண்டி வடக்கு பாத்ததும்பறை ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்திற்காக சீனாவின் எக்சிம் வங்கியால் செலுத்தப்படாத கட்டணங்களைச் செலுத்துவதற்கும், எஞ்சியிருக்கும் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கான நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுக்குரிய குறைநிரப்பு மதிப்பீடும் கவனத்தில் எடுக்கப்பட்டது. இந்த இரு குறைநிரப்பு மதிப்பீடுகளுக்கும் குழு அனுமதி வழங்கியது.

அத்துடன், இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான முதலீடுகளை மேம்படுத்தல் மற்றும் பரஸ்பர பாதுகாப்புக் குறித்த தீர்மானம் குறித்தும் குழு கவனம் செலுத்தியிருந்ததுடன், இதற்கும் அனுமதி வழங்கியது.

இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, (சட்டத்தரணி) ரவூப் ஹக்கீம், ஹர்ஷன ராஜகருணா, (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:26:09
news-image

தற்போதைய அரசாங்கத்தின் தரமற்ற நிலக்கரி ஊழலானது...

2026-03-14 17:20:13
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:12:12
news-image

தமிழ்க் கட்சிகள் கடமை தவறிவிட்டன; தலைமையை...

2026-03-14 17:05:14
news-image

சுகாதார சேவையில் பாரிய விரிவாக்கம்: 2,918...

2026-03-14 17:02:52
news-image

கட்டானவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர்...

2026-03-14 16:39:49
news-image

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை...

2026-03-14 16:11:41
news-image

காத்தான்குடி கடற்கரையில் 25 அடி நீளமான...

2026-03-14 16:08:29
news-image

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவைச் செயற்படுத்துக:...

2026-03-14 16:08:01
news-image

இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை...

2026-03-14 15:43:28
news-image

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க ஐக்கிய மக்கள் சக்தி...

2026-03-14 15:15:53
news-image

விரிவான ஆலோசனையின் மூலம் தயாரிக்கப்பட்ட "தேசிய...

2026-03-14 15:03:57