வாடிக்கையாளர்களுக்கு விசேட அனுகூலங்களை வழங்கும் எசட்லைன் ஃபினான்ஸ் மற்றும் ஐடியல் மோட்டர்ஸ்

04 Sep, 2025 | 10:56 AM
image

டேவிட் பீரிஸ் ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் முன்னணி நிதிச் சேவைகள் நிறுவனமான எசட்லைன் ஃபினான்ஸ் லிமிடெட் (AFL), ஐடியல் மோட்டர்ஸ் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்துடன் முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

இதில் இரு நிறுவனங்களினதும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அதில், ஐடியல் மோட்டர்ஸ் சார்பாக, பணிப்பாளர் நிமிஷா வெல்கம, பொது முகாமையாளர் கசுன் பெர்னான்டோ மற்றும் எசட்லைன் ஃபினான்ஸ் லிமிடெட் சார்பாக பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷான் நிஸ்ஸங்க, பிரதம செயற்பாட்டு அதிகாரி மஹேஷ் டி சில்வா, பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி அஜந்த பிரேமசிறி மற்றும் நான்கு சர்க்கர வாகனங்கள் கடன் வழங்கல் பிரிவின் தலைமை அதிகாரி நாமல் கூரே ஆகியோர் அடங்கியிருந்தனர்.

எசட்லைன் ஃபினான்ஸ் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷான் நிஸ்ஸங்க கருத்துத் தெரிவிக்கையில், “ஐடியல் மோட்டர்ஸ் உடனான எமது பங்காண்மையினூடாக, பரந்த, அணுகக்கூடிய மற்றும் போட்டிகரமான வாகன நிதிவசதியளிப்பு சேவைகளை சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மை வியாபாரங்களுக்கு பெற்றுக் கொடுப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

இந்தப் பங்காண்மை தொடர்பில் ஐடியல் மோட்டர்ஸ் பணிப்பாளர் நிமிஷா வெல்கம கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்ற நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமொன்றுடன் கைகோர்த்து, மஹிந்திராவின் பரந்த வாகனத் தெரிவுகளை அணுகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதையிட்டு நாம் பெருமை கொள்கிறோம்.” என்றார்.

இணைந்த சந்தைப்படுத்தல் பிரச்சாரத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு, மஹிந்திராவின் முழு வாகனத் தெரிவுகளும் வெளிப்படுத்தப்பட்டு, வர்த்தக நாம விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுவதுடன், வாடிக்கையாளர்களை சென்றடையும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

சகல வாடிக்கையாளர்களுக்கும் அனுகூலமளிக்கும் வகையில் சந்தை வெளிப்பாட்டை ஊக்குவிப்பதாக இந்த பிரச்சார நடவடிக்கை அமைந்திருக்கும்.

நிதிவசதியளிப்பு தெரிவுகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு www.assetline.lk எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும் அல்லது எசட்லைன் வாடிக்கையாளர் சேவை தொலைபேசி இலக்கமான 0114 700100 உடன் தொடர்பு கொள்ளவும்.

படங்கள்:

இடமிருந்து: எசட்லைன் ஃபினான்ஸ் MIS, திட்டமிடல் மற்றும் மூலோபாய பொது முகாமையாளர் பெரோஸ் அஹமட், நான்கு சர்க்கர வாகனங்கள் கடன் வழங்கல் தலைமை அதிகாரி நாமல் கூரே, பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி அஜந்த பிரேமசிறி, பிரதம செயற்பாட்டு அதிகாரி மஹேஷ் டி சில்வா, பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷான் நானயக்கார, ஐடியல் மோட்டர்ஸ் பணிப்பாளர் நிமிஷா வெல்கம, பொது முகாமையாளர் கசுன் பெர்னான்டோ, வணிக அபிவிருத்தி முகாமையாளர் தினேஷ் மானகே, வணிக உறவுபேண் முகாமையாளர் வினோஜ் தஹநாயக்க, எசட்லைன் ஃபினான்ஸ் செனல் முகாமைத்துவ தலைமை அதிகாரி சங்க ஜயம்பதி, வணிக அபிவிருத்தி பிரதம முகாமையாளர் மஞ்ஜுள கன்னிலெ, மற்றும் உதவி முகாமையாளர் ஜஸ்டின் ஆனந்தராஜா ஆகியோர் காணப்படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Excello Developers நிர்மாணித்துள்ள ஆதவன் அடுக்குமனை:...

2026-07-16 19:06:20
news-image

2026 மாகாண பாடசாலை விளையாட்டுகளுக்கு தொடர்ச்சியாக...

2026-07-15 15:39:49
news-image

சிறிய, நடுத்தர வணிகங்களின் (SMB) வளர்ச்சியை...

2026-07-06 16:20:49
news-image

2,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 450க்கும் அதிக...

2026-07-06 13:23:11
news-image

ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் தனது...

2026-07-03 17:26:38
news-image

அஞ்சியோகிராம் சத்திர சிகிச்சை கவசங்களை நன்கொடையாக...

2026-07-01 18:05:32
news-image

'கொட்டகல கஹட்ட ரச வாசனா 2025'...

2026-07-01 16:49:54
news-image

50 அதிர்ஷ்டசாலிகளுக்கு மவுண்டன் சைக்கிள்கள் வழங்கி...

2026-07-01 16:39:39
news-image

ரூ. 200 பில்லியன் சொத்து மதிப்பை...

2026-07-01 16:34:30
news-image

இளம் விளையாட்டு வீரர்களை உலகத் தரத்திற்கு...

2026-07-01 09:50:18
news-image

பணப் பாவனையற்ற டிஜிட்டல் இலங்கைக்கு வலுசேர்க்கும்...

2026-06-25 15:08:16
news-image

“Shakira Live in Kandy 2026”,...

2026-06-08 15:19:26