துசித ஹல்லொலுவவின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு ; சட்டத்தரணியை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு!

04 Sep, 2025 | 10:02 AM
image

கடந்த மே மாதம் 17 ஆம் திகதி தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் துசித ஹல்லொலுவவின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் சட்டத்தரணி ஒருவரை கைதுசெய்வதற்கு கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த சட்டத்தரணி சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பிரிஸ், துசித ஹல்லொலுவவின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் சந்தேகிக்கப்படும் சட்டத்தரணிக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  குறித்த சட்டத்தரணி துசித ஹல்லொலுவவுக்கு எதிராக எந்தவித குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பிரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இதனை கருத்தில் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம், குறித்த சட்டத்தரணியை கைதுசெய்வதற்கு கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

இந்த இடைக்கால தடை உத்தரவு 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மஹியங்கனையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2026-09-11 09:13:52
news-image

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: விசாரணைக்கு 03...

2026-09-11 08:56:14
news-image

தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல்: இரு பிள்ளைகள்...

2026-09-11 07:54:57
news-image

இன்றைய வானிலை

2026-09-11 06:26:29
news-image

2027ல் கடுமையான வறட்சி ஏற்படலாம்: நீர்...

2026-09-10 15:23:36
news-image

இலங்கை தொடர்பான இரகசிய ஒப்பந்தங்களை வெளிப்படுத்த...

2026-09-10 15:24:01
news-image

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு புனித நீரைத்...

2026-09-10 15:24:49
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஒரு...

2026-09-10 19:39:05
news-image

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்...

2026-09-11 08:31:53
news-image

நாமல் ராஜபக்‌ஷவை சிறையில் அடைப்பதன் மூலம்...

2026-09-10 16:06:41
news-image

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பதவி நிலை...

2026-09-10 16:07:16
news-image

பொதுஜன பெரமுனவின் அநுராதபுர கூட்டத்துக்கு தேசிய...

2026-09-10 19:39:39