மத்­திய வங்­கியில் இடம்­பெற்­றுள்ள பிணை­முறி மோச­டி­யி­லி­ருந்து அர­சாங்கம் தப்­பித்­துக்­கொள்­வ­தற்கு அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை மட்டும் பத­வி­யிலி­ருந்து விலக்க முற்­ப­டலாம். எனினும் அதற்கு மாத்­திரம் நாம் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. எனவே பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க மற்றும் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­ ஆகிய இருவருக்கும் எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணையை கொண்­டு­வ­ரு­வ­தற்கு கூட்டு எதிர்க்­கட்சி எதிர்­பார்த்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.பி.ரத்­நா­யக்க தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­ செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பகல் பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் பாதுகாக் வேண்­டிய பொறுப்பு பொலி­ஸா­ருக்கு உள்­ளது. எனினும் பொலிஸ் மா அதிபர் தற்­போது சட்­டத்தை அர­சாங்­கத்தின் தேவைக்கு அமை­வாக மாற்­று­கிறார். வடக்கில் ஒரு வித­மா­கவும் தெற்கில் மற்­று­மொரு வித­மா­கவும் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

மேலும் அர­சாங்கம் வகை­தொ­கை­யின்றி தேசிய வளங்­கைள வெளி­நா­டு­க­ளுக்கு தாரை வார்க்­கி­றது. அம்­பாந்­தோட்டை  துறை­மு­கத்தை  சீனா­விற்கு விற்­பனை செய்­வ­தற்­கான ஒப்­பந்தம் எதிர்­வரும் சனிக்­கி­ழமை கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளது. இது மிகவும் பார­தூ­ர­மா­ன­தாகும். ஏனெனில் அம்­பாந்­தோட்டை துறை­மு­க­மா­னது நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் மிக முக்­கிய இடம் வகிக்­க­வுள்­ளது.

துறை­மு­கங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்­ச­ராக அர்­ஜ­ஶண ரண­துங்க பதவி வகித்­த­போது அவர் அவ்­வொப்­பந்­தத்­திற்கு உடன்­ப­ட­வில்லை. எனவே அவரை அவ்­வ­மைச்­சி­லி­ருந்து நீக்­கி­விட்டு தற்­போது தேசியப் பட்­டியல் மூலம் தெரி­வான பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரூ­டாக குறித்த உடன்­ப­டிக்­கையை செய்­து­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை  எடுத்­துள்­ளனர்.

அவ்­வு­டன்­ப­டிக்­கைக்கு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அமைச்­ச­ரை­வயின் அனு­மதி பெறப்­பட்­ட­துடன் வெள்­ளிக்­கி­ழமை (இன்று)  பாரா­ளு­மன்றில் விவாதம் நடத்தி எதிர்­வரும் சனிக்­கி­ழமை கைச்­சாத்­தி­டு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர். ஏன் இவ்­வாறு அவ­ச­ர­மாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்? ஆகவே அவ்­வு­டன்­ப­டிக்­கைக்கு எதி­ராக நாட்­டு­மக்கள் அனை­வரும் ஒன்­று­தி­ரள வேண்டும். 

மேலும் மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் இடம்­பெற்­றுள்ள மோச­டிக்­காக அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க  மாத்­தி­ர­மல்­லாது நல்­லாட்சி அர­சாங்­கமே பொறுப்­புக்­கூற வேண்­டி­யுள்­ளது. எனவே அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை மட்டும் பதி­வி­யி­ருந்து விலக்கி அர­சாங்கம் குறித்த குற்றச்சாட்டிலிருந்து விலகுவதற்கு எத்தணிக்கலாம். எனினும் அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை.

ஆகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய இருவருக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டுவருவதற்கு கூட்டு எதிர்கட்சி எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.