இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை இரவு (செப்டெம்பர் 4 ) முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தீர்மானித்துள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மறுசீரமைப்பு செயல்முறையானது மின்சார திருத்தச் சட்டத்தின் விதிகளுக்கு அமையவில்லையெனக் கூறியும் பொறியியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து மின்சார சபை ஊழியர்களும் இவ்வாறு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
இது குறித்து இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரம தெரிவிக்கையில்,
இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டாக இந்த தொழிற்சங்க நடவடிக்கையைத் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவும் இந்த சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையானது, மறுசீரமைப்பு நடவடிக்கை மற்றும் ஊழியர்களின் உரிமைகள் உள்ளிட்ட 24 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து புறக்கணித்ததாலும் இதற்கு தீர்வினை வழங்காததாலும் இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM