அரசியலமைப்பு சார் உரிமைகளைப் பறிக்க அரசாங்கம் முயற்சி; ஜனநாயகத்துக்கான வழக்கறிஞர்களின் ஒருமைப்பாட்டு குழு

Published By: Vishnu

03 Sep, 2025 | 08:54 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பின் ஊடாக எமக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் உரிமைகளை அரசாங்கம் பலவந்தமாக மீளப் பெற முற்படுகிறது. இவ்வாறான நிலைமையைத் தடுப்பதற்கு ஜனநாயகத்துக்கான வழக்கறிஞர்களின் ஒருமைப்பாட்டு குழு சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பின் ஊடாக எமக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் உரிமைகளை அரசாங்கம் பலவந்தமாக மீளப் பெறுகின்றதா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே இவ்வாறான நிலைமையைத் தடுப்பதற்கு ஜனநாயகத்துக்கான வழக்கறிஞர்களின் ஒருமைப்பாட்டு குழு சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது. கட்சி வேறுபாடின்றி மக்களின் உரிமைகளுக்காக நாம் குரல் கொடுப்போம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

ஆனால் தற்போது அவருக்கு உத்தியோகபூர்வமாக இராஜதந்திர ரீதியிலேயே குறித்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அந்த பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 38 பேரிடம் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் மிக முக்கியமாக இந்த அழைப்பிதழ் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க குற்றப்புலனாய்வு திணைக்களம் தவறியுள்ளது. இவ்வாறான நிலைமையே இன்று நாட்டில் நாட்டில் காணப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் சுயாதீன நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பிணை வழங்கப்பட்டாலும், மக்கள் பலத்தைக் காண்;பித்து வழக்கு தீர்ப்பினைப் பெற்றுக் கொள்ள எதிர்க்கட்சிகள் முயற்சித்ததாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் தெரிவித்துள்ளது. ஆனால் நாம் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். அன்று 52 நாள் அரசாங்கத்தின் போதும் நீதிமன்றத்தால் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்ப்பளிக்கப்பட்டது. அன்றும் நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர்.

அவ்வாறெனில் அன்றும் மக்கள் பலத்தை காண்பித்து தீர்ப்பு வழங்கப்பட்டது என்று கூறுகின்றனரா? அவ்வாறு கூறினால் அது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும். எனவே இவ்வாறான காரணிகளைக் கூறி அரசாங்கம் மக்களையும் நீதித்துறையையும் ஒடுக்க முற்பட்டால் சட்டத்தரணிகள் என்ற ரீதியில் நாம் அதற்கெதிராக குரல் கொடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். இணைப்புக்கு எதிர்ப்பு; தொழிற்சங்கங்கள்...

2026-07-17 14:34:16
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் : வழக்கு...

2026-07-17 16:18:43
news-image

புகைப்பிடிப்பதால் தினமும் 50 உயிரிழப்புகள்; ஆண்டுக்கு...

2026-07-17 16:19:13
news-image

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது...

2026-07-17 16:19:41
news-image

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்...

2026-07-17 16:20:09
news-image

மண்ணெண்ணெயில் இயங்கிய 100 பஸ்கள் அடையாளம்;...

2026-07-17 22:26:04
news-image

அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு...

2026-07-17 22:20:42
news-image

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு...

2026-07-17 22:08:58
news-image

தொழிற்கல்வியை வலுப்படுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில்...

2026-07-17 22:06:56
news-image

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்...

2026-07-17 21:48:04
news-image

சிறுபான்மைக் கட்சிகளின் புதிய கூட்டணி எமக்குத்...

2026-07-17 14:35:02
news-image

ஊழியர்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது...

2026-07-17 16:33:07