(நெவில் அன்தனி)
ருவன்வெல்லை பொது விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 32ஆவது தேசிய பாடசாலைகள் விளையாட்டு விழாவுடன் தொடர்புடைய சப்ரகமுவ மாகாண பாடசாலைகள் விளையாட்டு விழாவில் இரத்தினபுரி கலைமகள் தமிழ் வித்தயாலய மாணவி ஒருவர் 5000 மீற்றர் ஓட்டத்தில் போட்டி சாதனை நிகழ்த்தி வரலாறு படைத்துள்ளார்.

பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியை 20 நிமிடங்கள், 04.16 செக்கன்களில் நிறைவுசெய்த சசிகுமார் நிரோஷா புதிய போட்டி சாதனையை நிலைநாட்டினார்.
இவர் கடந்த மாதம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவுடன் தொடர்புடைய சப்ரகமுவ மாகாண போட்டிகளில் 3ஆம் இடத்தைப் பெற்றிருந்தார்.
சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டிகளில் சாதனை படைத்தது பெரு மகிழ்ச்சியைத் தருவதாக நிரோஷா தெரிவித்தார்.
இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள தேசிய பாடசாலைகள் விளையாட்டு விழாவிலும் பதக்கம் ஒன்றை வென்றெடுக்க உறுதிபூண்டுள்ளதாக நிரோஷா தெரிவித்தார்.
அத்துடன் தனது பாடசாலை அதிபர், பயிற்றுநர் ஆகியோருக்கு நன்றி கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM