சமீரவின் கட்டுப்பாடான பந்துவீச்சு, நிஸ்ஸன்க, கமிந்துவின் துடுப்பாட்டங்கள்  இலங்கைக்கு வெற்றி ஈட்டிக்கொடுத்தன

Published By: Vishnu

03 Sep, 2025 | 10:19 PM
image

(நெவில் அன்தனி)

ஸிம்பாப்வேக்கு எதிராக ஹராரே விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று புதன்கிழமை (03) நடைபெற்ற முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்களால் இலங்கை வெற்றிபெற்றது.

சர்வதேச ரி20 கிரிக்கெட் வரலாற்றில் ஸிம்பாப்வே மண்ணில் விளையாடிய முதல் சந்தர்ப்பத்திலேயே இலங்கை வெற்றியை சம்பாத்தித்துக்கொண்டது.

துஷ்மன்தவின் கட்டுப்பாடான பந்துவீச்சு, பெத்தும் நிஸ்ஸன்க குவித்த அரைச் சதம், கமிந்து மெண்டிஸின் அதிரடி துடுப்பாட்டம் என்பன இலங்கையை வெற்றிபெறச் செய்தன.

ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 176 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 61 பந்துகளில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், அவர்கள் இருவரும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

பெத்தும் நிஸ்ஸன்க 52 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

தொடர்ந்து குசல் பெரேரா (4), அணித் தலைவர் சரித் அசலன்க (1), 4ஆம் இலக்கத்தில் பரீட்சிக்கப்பட்ட நுவனிது பெர்னாண்டோ (7), தசுன் ஷானக்க (6) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். (142 - 6 விக்.)

எனினும், கமிந்து மெண்டிஸ், அறிமுக வீரர் துஷான் ஹேமன்த ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர்.

அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் 16 பந்துகளில் ஒரு பவுண்டறி, 4 சிக்ஸ்கள் உடப்ட 41 ஓட்டங்களுடனும் துஷான் ஹேமன்த 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ரிச்சர்ட் நிகாரவா 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது.

ஸிம்பாப்வேயின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

தடிவனாஷே மருமணி (7), சோன் வில்லிம்ஸ் (14) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். (56 - 2 விக்).

எனினும் ஆரம்ப வீரர் ப்றயன் பெனெட் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணித் தலைவர் சிக்கந்தர் ராசாவுடன் 3ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தார்.

சிக்கந்தர் ராஸா 28 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் ரெயான் பேர்ளுடன் மேலும் 51 ஓட்டங்களை பெனெட் பகிர்ந்தார். (160 - 4 விக்.)

ரெயான் பேர்ள் 17 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆனால், 4 விக்கெட்கள் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.

19ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்த பெனெட் 12 பவுண்டறிகளுடன் 81 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் துஷ்மன்த சமீர 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆட்டநாயகன்: கமிந்து மெண்டிஸ்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் லீக்கில் கடைநிலையில் உள்ள ரட்னம்...

2026-08-09 13:33:39
news-image

ரெட் ஸ்டார் உடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி...

2026-08-09 12:54:45
news-image

மூன்று எல்பிஎல் அத்தியாயங்களில் Jaffnaவிடம் தோல்வி...

2026-08-09 11:13:57
news-image

முகத்துவாரம் குளோபல் சிறுவர் முன்பள்ளி தந்தையர்...

2026-08-08 23:22:32
news-image

ரெட் ஸ்டார் - நியூ யங்ஸ்...

2026-08-08 13:18:49
news-image

வடக்கும் தெற்கும் நான்காவது தடவையாக மோதும்...

2026-08-08 13:11:34
news-image

சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் நான்கு அணிகளுக்கு...

2026-08-08 10:00:06
news-image

கலம்போ கெப்ஸ் அணியை 6 விக்கெட்களால்...

2026-08-08 05:40:25
news-image

கலம்போ எவ்.சி. - றினோன் போட்டி...

2026-08-07 19:27:38
news-image

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா...

2026-08-07 16:07:43
news-image

கண்டி றோயல்ஸை வெளியேற்றி இரண்டாவது தகுதிகாண்...

2026-08-06 02:19:43
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ்

2026-08-05 22:17:51