பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர் 

Published By: Vishnu

03 Sep, 2025 | 06:53 PM
image

அரசியலமைப்பின் 79 யாப்புக்கு அமைய பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன புதன்கிழமை (03) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

கடந்த மாதம்  19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை அடுத்து திருத்தங்களுடன் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய, இந்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டின் 17 இலக்க பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.

இந்த சட்டம் பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையைத் தாபிப்பதற்காகவும்; (44 ஆம் அத்தியாயமான) குதிரைப் பந்தய ஓட்டத்தின்மீது பந்தயம் பிடித்தல் கட்டளைச்சட்டத்தையும், (46 ஆம் அத்தியாயமான) சூதாட்டக் கட்டளைச்சட்டத்தையும் மற்றும் 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தையும் நீக்குவதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும்.

அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமாகும்.

இலங்கையில் பணச்சூதாட்டத் தொழிலை ஒழுங்குபடுத்தல், பணச்சூதாட்டச் செயற்பாடுகளுக்கு தனியான ஒழுங்குபடுத்தும் நிறுவனமாக பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை ஸ்தாபித்தல் என்பவற்றுக்கு இந்த சட்டம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தேச அதிகாரசபை கப்பல்களில் அல்லது கொழும்பு துறைமுக நகரத்தில் ஒன்லைன் மற்றும் கடல் கடந்த பணச்சூதாட்ட செயற்பாடுகள் தொடர்பில் சட்டரீதியாக அதிகாரமளிக்கக்கூடிய சமூகப் பொறுப்புக் கோவைகளை வெளியிடுவதற்கும் விரிவான விடயப்பரப்புடன் கூடிய சுயாதீன ஒழுங்குபடுத்தும் நிறுவனமாக செயற்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலையின்...

2026-07-10 18:40:05
news-image

வடக்கில் இராணுவக் குறைப்பு மற்றும் பலாலி...

2026-07-10 18:38:06
news-image

தித்வா அனர்த்த நிதி திறைசேரியில் பாதுகாப்பாக...

2026-07-10 16:11:37
news-image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கௌரவத்தையும் உயர்த்துவதே அரசின்...

2026-07-10 20:53:55
news-image

ஒற்றையாட்சி, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு வார்த்தையின்...

2026-07-10 14:30:42
news-image

சிறைச்சாலை வன்முறைகளைத் தடுத்திருக்க முடியும் ;...

2026-07-10 13:21:14
news-image

பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இலங்கையின்...

2026-07-10 13:11:19
news-image

குழந்தை பிறப்பை அதிகரிக்க ஊக்கத்தொகை: நாடாளுமன்றத்தில்...

2026-07-10 16:01:53
news-image

துறைமுக நகர ஆணைக்குழுவுக்கு அதிக சம்பளம்;...

2026-07-10 14:45:23
news-image

கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடி...

2026-07-10 14:31:38
news-image

கிழக்கு புகையிரத பிரச்சினைகளுக்கு நேரடி கள...

2026-07-10 15:31:04
news-image

சேவைக்காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பும்...

2026-07-10 20:04:01