(நெவில் அன்தனி)
சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற உலக சாதனையை ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் ராஷித் கான் படைத்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச ரி20 மும்முனை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 165ஆக உயர்த்திக்கொண்டார்.
இதன் மூலம் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை ராஷித் கான் நிலைநாட்டினார்.
ஒட்டுமொத்த ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை கடந்த சில மாதங்களாக தன்னகத்தே கொண்டிருந்த ராஷித் கான், இப்போது சர்வதேச ரி20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற மற்றொரு உலக சாதனையை தனதாக்கிக்கொண்டுள்ளார்.
சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் 164 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் இருந்த நியூஸிலாந்தின் ஓய்வுநிலை வீரர் டிம் சௌதியை சில மாதங்களுக்கு முன்னர் சமப்படுத்திய ராஷித் கான் தனது 98ஆவது போட்டியில் 165ஆவது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் புதிய உலக சாதனை நாயகனானார்.
நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுடனான போட்டி வரை 99 சர்வதேச ரி20 போட்டிகளில் விளையாடியுள்ள ராஷித் கான் இதுவரை மொத்தமாக 167 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.
இதேவேளை, சகலவிதமான ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை கடந்த பெப்ரவரி மாதம் ராஷித் கான் நிலைநாட்டியிருந்தார்.
490 ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ராஷித் கான் 666 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றி முதலிடத்தில் இருக்கிறார்.
மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் சகலதுறை வீரர் ட்வேன் ப்ராவோ 631 விக்கெட்களைக் கைப்பற்றி இரண்டாம் இடத்திலுள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM