(நெவில் அன்தனி)
இலங்கை - ஸிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி ஹராரேயில் இன்று மாலை நடைபெறவுள்ளது.
சர்வதேச ரி20 கிரிக்கெட் வரலாற்றில் ஸிம்பாப்வேயை 6 போட்டிகளில் இலங்கை எதிர்கொண்டுள்ள போதிலும், ஸிம்பாப்வே மண்ணில் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை விளையாடவிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
இந்தத் தொடர் ஆசிய கிண்ணத்திற்கும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணத்திற்கும் அதிசிறந்த கலவை அணியைத் தெரிவுசெய்ய உதவும் என ஹராரேயில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இலங்கை அணித் தலைவர் சரித் அசலன்க தெரிவித்தார்.
ஸிம்பாப்வேயுடனான ரி20 தொடரை முன்னிட்டு இலங்கை அணி முழுமையான தயார் நிலையில் இருப்பதாகவும் வீரரகள் சிறந்த, உறுதியான மனோநிலையுடன் இத் தொடரை எதிர்கொள்ள காத்திருப்பதாவும் அவர் கூறினார்.
'ஸிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஈட்டிய வெற்றி இலங்கை அணிக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ள போதிலும் அந்த இரண்டு போட்டிகளிலும் 50ஆவது ஓவரில் வெற்றிபெற நேரிட்டது. எனவே இத்தகைய திறமையான அணிகளுடன் மோதும்போது இறுதிவரை போராட்டக் குணத்துடன் அதேவேளை, பொறுமையுடன் விளையாட வேண்டும். எமது அணியில் 4ஆம் இலக்கத்திற்கு ஒரு திறமையான நிரந்தர வீரரைத் தெரிவுசெய்வதற்கு இந்தத் தொடர் வழிவகுக்கும் என நான் எண்ணுகிறேன். முதலாவது போட்டியில் அந்த ஸ்தானத்தில் நுவனிது பெர்னாண்டோ விளையாடுவார்' என சரித் அசலன்க மேலும் தெரிவித்தார்.
இலங்கை வேகபந்து வீச்சு பலமாக இருக்கின்ற அதேவேளை, வனிந்து ஹசரங்க இல்லாதது பெருங்குறை எனக் குறிப்பிட்ட அசலன்க, ஆசிய கிண்ணத்தில் வனிந்து ஹசரங்க விளையாடுவார் என நம்பிக்கை வெளியிட்டார்.
இது இவ்வாறிருக்க மத்திய பின்வரிசையில் துடுப்பாட்டத்தை பலப்படுத்துவதிலும் இலங்கை அணி கவனம் செலுத்தி வருகிறது.
சிரேஷ்ட வீரர் தசுன் ஷானக்க அந்த இடத்தை நிரப்பும் அதேவேளை, சாமிக்க கருணாரட்ன, துனித் வெல்லாலகே ஆகியோரும் பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இலங்கை அணியில் தற்போது சகலதுறை வீரர்கள் தாராளமாக இருக்கின்றனர். ஆனால், சகலதுறைகளிலும் அவர்கள் தொடர்ச்சியாக திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும்.
ஸிம்பாப்வே அணியும் தனது சகலதுறை வீரர்களிலேயே நம்பிக்கைக் கொண்டுள்ளது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் இதுவரை நடைபெற்ற 6 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 5 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை முன்னிலையில் இருக்கிறது.
அணிகள் (பெரும்பாலும்)
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நுவனிது பெர்னாண்டோ, சரித் அசலன்க (தலைவர்) கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக்க, சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரண, துஷ்மன்த சமீர அல்லது நுவன் துஷார அல்லது பினுர பெர்னாண்டோ.
ஸிம்பாப்வெ: டியொன் மயர்ஸ், ப்றயன் பெனெட், க்ளைவ் மதண்டே, சிக்கந்தர் ராஸா (தலைவர்), ரெயான் பேர்ல் அல்லது ப்றெண்டன் டெய்லர், டோனி முன்யொங்கா, சோன் வில்லியம்ஸ், வெலிங்டன் மசகட்ஸா, டினோடெண்டா மப்போசா, ரிச்சர்ட் நிகராவா அல்லது ட்ரவோ குவாண்டு
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM